அனிதா, ஸ்ரீதேவிக்கு நான் மெசேஜ் பண்ணுனேன்.. ஆனால் அவங்க! அப்பா கிட்ட... நடிகை வனிதா எமோஷனல்
சென்னை: நடிகை வனிதா தன்னுடைய குடும்பத்தை பற்றி கடந்த வருடம் நடிகை ஷகிலாவோடு பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய தந்தையோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு தான் தன்னுடைய அக்கா அனிதா மற்றும் தங்கச்சி ஸ்ரீதேவிக்கு மெசேஜ் செய்தேன். ஆனால் அவங்க என் நம்பரை பிளாக் பண்ணிட்டாங்க என்று பேசி இருக்கிறார்.
நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது எல்லோருக்குமே தெரியும். முதல் மனைவி முத்துக்கண்ணு. அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருக்கும் போது முத்துக்கண்ணுவோடு ஏற்பட்ட பிரச்சனையால் விஜயகுமார் அப்போது அவரை விவாகரத்து செய்திருக்கிறார். பிறகு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.

இதில் வனிதா, விஜயகுமார் குடும்பத்தோடு கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட சொத்து பிரச்சனையை பெரிய அளவில் பூகம்பமாக வெடித்தது. அதற்கு பிறகு வனிதா தன்னுடைய குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் தான் அவருடைய அம்மா மஞ்சுளா இறந்து போயிருந்தார்.
மஞ்சுளாவின் இறப்புக்கு போயிருந்த வனிதாவிற்கு அவருடைய குடும்பத்தினர் பிரச்சனைகளில் ஈடுபட்டதாகவும் அப்போது சரத்குமார் ராதா ரவி, ரஜினிகாந்த் போன்றோர் தலையிட்டு அந்த நேரத்தில் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருந்ததாகவும் வனிதா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இப்படியான நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதாவின் மகள் தியாவிற்கு திருமணம் நடைபெற்றது.
கடந்த வாரம் இந்த திருமணம் நடைபெற்ற பிறகும் விஜயகுமார் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை வனிதா விஜயகுமார் குடும்பத்தை பற்றி பேசிய வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் வனிதாவும் நடிகை ஷகிலாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஷகீலாவிடம் நடிகை வனிதா நான் என்னுடைய அப்பாவோடு 2011 இல் பிரச்சனை ஏற்பட்டது எல்லோருக்குமே தெரியும்.
அதற்குப் பிறகு நான் அவரிடம் பேசி விட்டேன். ஆனால் அவர் வீட்டில் இருப்பவர்களுக்கு பயந்து தான் என்னிடம் பேசினார். நான் போன் பண்ணுற நேரம் எல்லாம் அவர் பாத்ரூமில் இருந்து எங்கேயாவது இருந்து மறைந்து இருந்து என்னிடம் பேசினார். அதனால் நான் அவருக்கு இந்த வயதான காலத்தில் பிரஷர் கொடுக்க வேண்டாம் என்று என்னுடைய அக்கா அனிதா, தங்கை ஸ்ரீதேவி எல்லோருக்கும் மெசேஜ் செய்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். நடந்தது நடந்து விட்டது இனி நாம எல்லாரும் மீண்டும் ஒன்றாக இருக்கலாம் என்று நான் அவர்களுக்கு மெசேஜ் பண்ணுனேன். ஆனால் அவர்கள் என்னுடைய நம்பரை பிளாக் செய்து விட்டார்கள். ஸ்ரீதேவி எங்க அப்பாவிடம் வனிதா எதற்கு எனக்கு மெசேஜ் பண்றா என்று கோபப்பட்டு இருக்கா... உடனே என்னுடைய அப்பா எனக்கு போன் பண்ணி நீ ஸ்ரீதேவிக்கு என்ன மெசேஜ் பண்ணுனா என்று கேட்டார். நான் அதில் வேறு எதுவும் தப்பா பேசவில்லை. அப்பா இந்த நேரத்தில் கஷ்டப்பட வேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தேன். பிரச்சனை எனக்கும் எங்க அப்பாவுக்கும் தான் அவர் என்னை மன்னித்து விட்டார். ஆனால் இவங்க எல்லாரும் சேர்ந்துகிட்டு என்ன ஒதுக்கி வைக்கிறாங்க ஆனாலும் நான் அவர்களோடு சேர வேண்டும் என்று அவர்களுக்கு சோசியல் மீடியாவில் பிரைவேட்டாகவும் மெசேஜ் செய்தேன், வாட்ஸப்பில் மெசேஜ் செய்தேன். ஆனால் எல்லாவற்றையும் அவர்கள் பிளாக் செய்து விட்டார்கள் என்று வனிதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications