வனிதாவுக்காக விஜயகுமாரை வம்பு இழுத்த ராபர்ட் மாஸ்டர்.. நடந்த அதிசயம்.. நள்ளிரவில் வெளியான வீடியோ
சென்னை: நடிகை வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் ஜோடியாக மிஸஸ் அண்ட் மிஸ்டர் ( mrs& Mr) என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் வீடியோ ஒன்றை நேற்று வனிதா வெளியிட்டு இருக்கிறார். அப்போது விஜயகுமாரை வம்பு இழுப்பது போல ராபர்ட் மாஸ்டர் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
நடிகை வனிதாவும் அவருடைய முன்னாள் காதலருமான ராபர்ட் மாஸ்டரும் இணைந்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தனர். இதை பார்த்ததும் வனிதாவுக்கு நான்காவது முறையாக கல்யாணமா என்ற கேள்விகள் குவிந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு வனிதா தன்னுடைய youtube பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தங்களுடைய படத்தின் பெயர் மற்றும் அந்த படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதை நேற்று இரவு 12 மணி ஒரு நிமிடத்திற்கு பப்ளிஷ் செய்து இருக்கிறார்கள். இன்று வனிதாவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய பிறந்த நாளில் அவர் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த வீடியோவில் ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் காதலர்கள் போல கெஞ்சி கொண்டிருக்கிறார்கள். வனிதா நான் சொல்லப் போறேன் என்று சொல்ல, ராபர்ட் மாஸ்டர் சொல்ல வேண்டாம் என்று கெஞ்ச... இருவர்கள் இருவரும் செய்யும் அக்கபோராக சிலர் சிலாகிக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அக்கா நீங்கதான் எப்பவுமே சந்தோஷமா இருக்கிற ஆளு என்று அவரை மேலும் உசுப்பேத்தி விடுகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் அப்போ இது உங்களின் திருமணம் கிடையாதா? நீங்க படத்திற்காக நடிக்கும் புகைப்படத்தை தான் போஸ்ட் போட்டீங்களா என்று வருத்தத்தோடு கேள்வி கேட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அதேபோல அந்த வீடியோவில் ஒரு இடத்தில் வினிதா பிகு செய்து கொண்டு முன்னாடி நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவரை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக பேசிக் கொண்டிருக்கும்போது, நான் சொல்லலனா எனக்கு மண்டையை வெடிச்சிடும் என்று வனிதா சொல்கிறார்.
அதற்கு ராபர்ட் மாஸ்டர் நீ சொன்னா எனக்கு தொண்டையே வெடிச்சிடும் என்று சொல்ல, என்ன பொய் சொல்ல சொல்றல்ல... நான் சொல்ல மாட்டேன் என்று வனிதா கோபித்துக் கொண்டு போகவும், அதற்கு ராபர்ட் மாஸ்டர் பெரிய நாட்டாமையோட பொண்ணு பொய் சொல்ல மாட்டாளாம் என்று சொல்லிக்கொண்டு இரு நான் சொம்பு எடுத்துட்டு வரேன் என்று பின்னாடியே போகிறார்.

விஜயகுமாரை நாட்டாமை என்று பலரும் குறிப்பிட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். வனிதாவே பல இடங்களில் நான் நாட்டாமையுடைய பொண்ணு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோவில் கூட அவரை வம்பு இழுத்து இருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு விஜயகுமாரின் ரசிகர்கள் அறிவுரை சொல்லி வருகிறார்கள். அதுபோல வனிதா வெளியிட்ட இந்த வீடியோ வெளியாகி 10 மணி நேரத்தில் ட்ரெண்டிங்கில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications