அம்மாவிடம் மனம் உருகி அழுதேன்! பூஜை அறையில் கிடைத்த ஸ்பெஷல் கிஃப்ட்.. வனிதா சொன்ன அமானுஷ்யம்
சென்னை: சமீபத்தில் நடிகர் விஜயகுமாரின் பேத்தியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்திற்கு விஜயகுமாரின் மகளான வனிதா கூப்பிடபடவில்லை. ஆனாலும் கெத்தாக வனிதா தன்னுடைய instagram பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் வனிதா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் தன்னுடைய அம்மா இறந்த பிறகு தான் அவரிடம் கண்கலங்கி அழுது அவரை நினைத்து வருந்தி கொண்டிருந்தபோது தனக்காக வீட்டிற்குள் ஒரு ஸ்பெஷல் கிப்ட் கிடைத்தது என்பது பற்றி அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் வனிதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல நடிகை வனிதாவின் குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி திருமண பிரச்சினையாக இருந்தாலும் சரி அது திறந்த புத்தகமாக தான் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எந்த இடத்திலும் வனிதா கவலைப்பட்டதும் கிடையாது. நடிகை வனிதா சினிமாக்களில் புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமண வாழ்க்கையில் இணைந்து சினிமா வாழ்க்கையை சில வருடங்களாக நிறுத்தி வைத்திருந்தார்.
ஆனால் அவருடைய வாழ்க்கையில் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் அடுத்தடுத்த திருமணங்கள் செய்து அதில் ஏகப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இப்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இப்படியான நிலையில் வனிதாவின் அப்பாவான விஜயகுமாரின் வீட்டில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் அதில் வனிதா கூப்பிட படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை கண்டுகொள்ளாத வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கம் ஒன்று தனியாக நடந்து வருவது போன்ற பதிவு வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் வனிதா ஏற்கனவே பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
அதில் வனிதா பேசுகையில், என்னுடைய அம்மா இறந்த பிறகு நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். எனக்குன்னு ஆறுதலாக இருந்தது என்னுடைய அம்மா தான் ஆனால் அவங்களும் என்னை விட்டுப் போன பிறகு நான் ரொம்ப அவங்களை நினைச்சு அழுதுட்டு இருந்தேன். அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் வொயிட் வாஷ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது வேலை செய்தவர்கள் எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போன பிறகுநான் பூஜை அறையில் பார்க்கும்போது அங்கு ஒரு கண்ணாடி இருக்கிறது.
அந்த கண்ணாடி போன்ற ஒரு கண்ணாடி என்னுடைய அம்மாவிடம் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த கண்ணாடி ரொம்பவும் ஸ்பெஷல் ஆனது. அது பல நடிகைகள் வைத்திருப்பார்கள். ரொம்பவும் கிராண்ட் ஆனது ஆனால் அதனுடைய பிரேம் கருப்பு கலரில் எங்களுடைய அம்மா வைத்திருந்தார். அதை எனக்கு வேணும் என்று நான் அம்மாவிடம் கூட கேட்டு இருந்தேன். ஆனால் திடீரென்று அந்த கண்ணாடி எங்களுடைய சாமி அறையில் இருந்தது.
அந்த கண்ணாடியை பார்த்ததும் நான் என்னுடைய மகள் ஜோவிகாவிடம் இது எப்படி இங்கே வந்தது என்று கேட்டேன். அதற்கு ஜோவிகா எனக்கு தெரியாது இங்கே தான் இருக்கிறது நீங்கதான் ஏதோ ஆர்டர் போட்டு வச்சிருக்கீங்கன்னு நெனச்சேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் நானும் ஆர்டர் போடவில்லை ஏதாவது கொரியரில் வந்திருந்தால் கூட அதற்கு கவர் இருக்கும், ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல் அந்த இடத்தில் கண்ணாடி எனக்கு ஸ்பெஷலாக கிடைத்தது.

இது என்னுடைய அம்மா உனக்காக நான் இருக்கிறேன் என்று எனக்கு பிடித்த பொருளை எனக்கு பரிசளித்ததாக தான் எனக்கு தோன்றுகிறது. அதுபோல வீட்டில் யாருக்குமே அந்த கண்ணாடி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இது இப்போ நினைத்தாலும் எனக்கு புல்லரித்து விடும். அந்த கண்ணாடியை நான் இப்போது பத்திரமாக வைத்திருக்கிறேன்.
அது என்னுடைய அம்மா எனக்கு தந்த கிஃப்ட் என்று தான் எனக்கு தோணுகிறது என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். இந்த நிலையில் வனிதாவின் தீவிரமான ரசிகர்கள் உங்களுடைய அப்பா குடும்பத்தினர் உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டாலும் கவலைப்படாதீர்கள் உங்களுடைய அம்மாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications