விஜயகுமார் பேரை காப்பாற்றிய வனிதா! அதுவும் அடுத்த ராதிகா இவர்தானா? மேடையில் உடைத்த விஷயம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிகை சோனியா அகர்வாலோடு சேர்ந்து நடித்த "தண்டுபாளையம்" என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அப்போது தன்னுடைய நடிப்பை பார்த்து ஆறு இயக்குனர்கள் தனக்கு போன் பண்ணி பாராட்டி இருந்தார்கள் என்று வனிதா பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் நடிகர் விஜயகுமாருக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவையில்லை. பல வருடங்களுக்கு முன்பு இருந்து இப்போது வரைக்கும் முன்னணி கேரக்டரில் அதிகமான மரியாதையான கேரக்டரிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயகுமார் வீட்டில் அவர் மட்டுமல்லாமல் அவருடைய மகள்கள் மகன் பேரப்பிள்ளைகள் என அதிகமானோர் நடிகர்களாக இருக்கின்றனர்.

அதில் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா விஜயகுமாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அதே நேரத்தில் வனிதா முதல் திருமணத்திற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்கி இருந்தாலும் இவருடைய திருமண வாழ்க்கை அடுத்தடுத்து ஏமாற்றத்தில் முடிவடைந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதற்குப் பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் நடிகை சோனியா அகர்வாலோடு சேர்ந்து "தண்டு பாளையம்" என்ற படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இது ஹீரோயின் சப்ஜெக்ட் சம்பந்தப்பட்ட கதை. இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிகை வனிதா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வனிதா, இந்த படத்தின் போஸ்டர் பார்த்து மிகப்பெரிய பிரபல இயக்குனர் ஆறு பேர் வனிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். அது மட்டும் இல்லாமல் அந்தக் காலத்தில் ராதிகாவை பார்த்த மாதிரியே இந்த படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீங்க.
அடுத்த ராதிகாவாகவே நீங்க வாழ்ந்திருக்கிங்க என்று பாராட்டியதாகவும் அந்த விழாவில் வனிதா கூறி இருக்கிறார். அதோடு விஜயகுமார், சரத்குமார் இருவரும் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. அப்படி இந்த படத்தில் விஜயகுமாரையும் சரத்குமாரையும் பார்த்த மாதிரி ஒரு பீல் இருந்தது என்றும் அந்த இயக்குனர்கள் பாராட்டியதாக வனிதா கூறி இருக்கிறார்.
அதோடு அவர்கள் இப்படி பாராட்டியது எனக்கு பெருமையாக இருந்தது. ஏனென்றால் என் அப்பாவின் படங்களில் வரிசையில் என்னுடைய படத்தையும் அந்த இயக்குனர்கள் கூறியது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்று வனிதா பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications