நடிகை வனிதாவை தொடர்ந்து அவருடைய மகள் செய்த செயல்.. instagram ஸ்டோரியால் உடைந்த ரகசியம்
சென்னை: நடிகை வனிதா மற்றும் அவருடைய மகள் பற்றிய செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காரணம் வனிதா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுதான்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு வனிதா தன்னுடைய மகளுக்கு 18 வயது ஆகிவிட்டது என்று சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நடிக்கப் போகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்பது போன்று மறைமுகமான ஒரு புகைப்படத்தை வனிதா வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த நடிகை வனிதாவிற்கு திடீரென்று திருமணம் நடந்து விட்டதால் சினிமாவில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் தஞ்சம் அடைந்தார். ஆனால் சில வருடங்களுக்குள் நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் வனிதா சிக்கிக் கொண்டிருக்கிறார்.
நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப பிரச்சனை அனைவருக்குமே தெரிந்த திறந்த புத்தகம்தான். வனிதா யாரோடு பேசி பழகினாலும் அவரை அடுத்த திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்று பெரும் பரபரப்பு ஏற்படும் வகையில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுகிறார்கள். அதே நேரத்தில் தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு வனிதாவும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் வனிதா தன் மகளோடு தனியாகத்தான் வசித்து வருகிறார். வனிதாவுடன் அவருடைய அப்பா விஜயகுமார் குடும்பத்தினரும் பேசுவதில்லை. இது குறித்து பலமுறை பல பேட்டிகளில் வனிதா பேசியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகள் ஜோவிதாவின் பிறந்தநாள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதை பார்த்ததும் ரசிகர்கள் வனிதாவை தொடர்ந்து அவருடைய மகளும் நடிக்க வந்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இனி நடிகர் விஜய்யின் மகனுக்கு ஜோடியாக வனிதாவின் மகள் நடிப்பாரா? என்றும் கூட கேள்விகளும், செய்திகளும் பரவி வருகிறது. இந்த நிலையில் அது குறித்து வனிதா விளக்கமும் கொடுத்து இருந்தார். அதாவது கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கதை வந்தால் நடிப்போம். நல்ல நடிகர் வேண்டும் என்று இல்லை. கதை மட்டும் நல்லபடியாக அமைந்தால் போதும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகள்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதனால் அதிகமான ரசிகர்கள் அதாவது இந்த முறை வனிதாவின் மகள் வனிதாவிற்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே ஜோவிதாவிற்கு 18 வயது ஆகிவிட்டதால் ஒருவேளை கலந்து கொள்ளலாமாக இருக்கலாம்.
ஆனாலும் வனிதா தான் கலந்து கொண்ட சீசனில் தன்னுடைய மகள் வந்த புகைப்படத்தை ஸ்டோரியாக வைத்திருக்கலாமோ...? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன நடந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த ரகசியம் உடைபட போகிறது. ஏற்கனவே வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிலரை தெறிக்க விட்டிருந்தார். அது போல அவருடைய மகள் கலந்து கொண்டால் எந்த மாதிரி இருக்கும் என்று பலர் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications