நாலு இல்ல நானூறு கல்யாணம் கூட பண்ணுவேன்..வீடியோ வெளியிட்ட நடிகை வனிதா..ட்ரண்ட் செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: நடிகை வனிதா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தான் முன்பு பேசிய வீடியோவை இப்போது பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நான் நாலு இல்ல நானூறு கல்யாணம் கூட பண்ணுவேன் என்று கேப்ஷன் கொடுத்து பகிர்ந்து இருக்கிறார்.
இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்கள் குவிக்கிறது.

நடிகை வனிதா சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரோடு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த நேரத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவி சமூக வலைத்தளத்தில் கண்ணீரோடு வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். அதுபோல பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் வனிதா உடன் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தார்.
இதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் தயாரிப்பாளர் ரவீந்தர் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக வனிதாவோடு கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சண்டை ஒரு மாதத்திற்குள் முடிவுக்கு வந்தது. நடிகை வனிதா பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்து இருந்தார். பிறகு வனிதா தன்னுடைய குழந்தைகளோடு தனியாகத்தான் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பீட்டர் பால் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு உடல்நல குறைவால் மரணம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வனிதாவின் முன்னாள் கணவர் என்றும் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் மரணம் அடைந்தார் என்றும் செய்திகள் வலம் வருகிறது. அது குறித்து தற்போது வனிதா அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், நிறைய பொறுமை மற்றும் சிந்தனைக்கு பிறகு சரி எதிர்வினை ஆற்றுகிறதோ இல்லையோ எல்லா மீடியா பத்திரிகை மற்றும் செய்தி சேனல்களையும் நினைவு கூறுவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை. அனைத்து மரியாதைகளுடன் நான் மறைந்த பீட்டர் பாலை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. 2020 ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு சுமூகமான உறவில் இருந்தோம். அது அதே ஆண்டு முடிந்தது.

நான் அவருடைய மனைவியும் இல்லை. அவர் என் கணவரும் இல்லை. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் மிகவும் சட்டபூர்வமாக தனிமையில் இருக்கிறேன். கணவர் இல்லை, எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்று கூறி இருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு வனிதா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவை இப்போ பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் நான் ஒரு பெண் பண்ணுகிறேன், அதுவும் தைரியமாக வெளிப்படையாக பண்ணுகிறேன். அதை பலரும் பலவிதமாக பிரித்து போடுகிறார்கள். அதற்கு காரணம் செய்தி சேனல்கள் தான்.நான் எது செய்தாலும் அதை உங்களிடம் சொல்லுவேன்.
ஆனால் மறைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்து அதற்கு கீழே நான் நாலு இல்ல நானூறு கல்யாணம் கூட பண்ணுவேன். அது என்னுடைய விருப்பம்.என்னுடைய வாழ்க்கை என்று கூறி இருக்கிறார்.. தற்போது இது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications