நடிகை வனிதாவை தொடர்ந்து மகளும் சின்னத்திரையில்.. கூட "அந்த” பிரபலம்.. ஓ சங்கதி இதுதானா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை, வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வனிதா தன்னுடைய மகளோடு சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகை வனிதாவிற்கு பெரிய அளவில் ஒரு திருப்புமுனையை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

அந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் தன்னுடைய மகளோடு கலந்து கொண்டிருக்கும் வனிதாவிற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Actress Vanithas daughter in Cook with Comali participate

பல நடிகைகள் வெள்ளித் திரையில் முன்னணி நடிகைகளாக இருந்துவிட்டு பிறகு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்து சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க ஆசைப்படும்போது அவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் கேரக்டர்கள் கிடைக்காததால் சீரியல் சின்னத்திரையை நோக்கி அடி எடுத்து வைத்து விடுகிறார்கள்.

அந்த மாதிரி தான் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை வனிதா பல வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரையிலும், வெள்ளி திரையிலும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய சர்ச்சைகளும் அந்த நேரத்தில் அதிகமாக எழுந்து கொண்டிருந்தது. ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் மூலமாக அசத்தியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இப்போது வெள்ளித் திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் youtube மூலமாக சில பிரபலங்களை பேட்டி எடுத்தும் அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரிவ்யூ கொடுத்தும் வருகிறார். இந்த நிலையில் தற்போது நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் வனிதா கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த முறை வனிதா மட்டுமல்லாமல் வனிதாவின் மகளும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் அம்மாவை தொடர்ந்து மகளும் சின்னத்திரையில் அறிமுகம் ஆகிவிட்டாரா? இவர் வெள்ளி திரையில் கதாநாயகியாக வருவார் என்றெல்லா நினைத்தோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அடுத்து நடிகை வனிதாவின் மகளுடைய பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்துக்களும் அதிகமான கமெண்ட்களில் காணப்படுகிறது.

அதே நேரத்தில் நடிகை வனிதாவின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் தாசோடு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார். இது குறித்தும் அதிகமான ரசிகர்கள் அடுத்து அர்ஜுன் தாஸ் உடன் திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா? என்று கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பதை அதில் நடிகை வனிதாவின் மகள் தெளிவு படுத்தி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+