மகனுக்காக வாழ்த்து தெரிவித்த வனிதா.. ஆனால் போஸ்டில் டுவிஸ்ட் வைத்த விஜய் ஸ்ரீஹரி
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தன்னுடைய மகன் முதல் திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கும் நிலையில் அந்த திரைப்பட முதல் போஸ்டர் வெளியாகி இருந்ததால் அதற்கு தன்னுடைய மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அது இணையத்தில் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பமாக விஜயகுமாரின் குடும்பம் இருந்து வருகிறது. விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கும் கடந்த ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆகாஷ் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் வனிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு இவர்களுக்குள் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாக மகன் ஸ்ரீஹரியை வனிதா பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஸ்ரீஹரி இப்போது அப்பாவின் அரவணைப்பிலும் தாத்தாவின் கண்காணிப்பிலும் இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விஜய் ஸ்ரீஹரி வெளியிட்ட புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் நீங்கள் வனிதாவின் மகன் தானே என்று கேட்ட கேள்விக்கு நான் ஆகாஷின் மகன் என்று பதில் கொடுத்திருந்தார். வனிதா மீது அவருக்கு இருக்கும் கோபத்தை அந்த கருத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படத்தில் ஸ்ரீஹரி நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மகன் நடிப்பதை தெரிந்து கொண்ட வனிதா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய மகன் குறித்து பாராட்டி ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.அதில் நான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை என்னுடைய மூத்த மகன் நடிகனாக மாறி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் என்று விஜய் ஸ்ரீஹரியை டேக் செய்து இருக்கிறார். அதோடு என்னுடைய மகனுக்காக கதை கேட்டு ஆசிர்வாதம் செய்த ரஜினி அங்கிளுக்கு ரொம்பவும் நன்றி. என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது. அவன் இன்னும் மேலும் அதிகமாக வளர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய மாம்போ திரைப்பட முதல் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விஜய் ஸ்ரீஹரி ஒரு "காட்டு பயணம் தொடக்கம்" என்று அதற்கு கேப்ஷன் கொடுத்து பிரபு சாலமன், இமான், யோகி பாபு உட்பட பலரையும் டேக் செய்து நன்றி கூறியிருக்கிறார். அதே நேரத்தில் தனக்கு வாழ்த்து சொல்ல பலருடைய போஸ்ட்களையும் தன்னுடைய ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.

ஆனால் தனக்கு வாழ்த்து சொன்ன தன்னுடைய அம்மாவின் போஸ்ட்டை அதில் ஸ்ரீஹரி இணைக்கவில்லை. அதே நேரத்தில் இன்னொரு பதிவில் எனது முதல் படமான மாம்போ படத்தில் டைட்டில் தோற்றத்தை பகிர்வதில் மகிழ்ச்சி... என்னை நம்பி இவ்வளவு பெரிய கேன்வாஸில் என்னை ஒரு முன்னணி வீரராக அறிமுகப்படுத்தியதற்காக காஜா மைதீன் சாருக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன்.
என் அன்பான இயக்குனர் பிரபு சாலமன் சார் சிறுவயதிலிருந்து அவருடைய படங்களை நான் ரசித்திருக்கிறேன். ஒரு நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், மனிதனாகவும் அவரால் வடிவமைக்கப்படுவது வாழ்நாள் முழுவதும் கிடைத்த வாய்ப்பாகும். மிக்க நன்றி ஐயா உங்கள் பள்ளி படிப்பில் என்னை ஒரு மாணவனாக அனுமதித்து கற்றுக்கொள்ள இந்த வாய்ப்பை தந்ததற்கு. உங்கள் மீது எனக்கு மிகுந்த அபிமானமும் மரியாதையும் அன்பும் உள்ளது.
அதுபோல யோகி பாபு சார் ஆரம்பத்தில் என்னை மிகவும் பயமுறுத்தினார். ஆனால் அவர் தனது அரவணைப்பினால் என்னை ஆறுதல் படுத்திய விதம் என்னால் மறக்க முடியாத ஒன்று என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு பலர் விஜய் ஸ்ரீ ஹரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications