வெறும் 14 வயசு தான்.. நடிகை வனிதா மகளா இப்படி? அந்த புத்தகத்தை பாத்தீங்களா..குவியும் பாராட்டு
சென்னை: நடிகை வனிதா தன்னுடைய இளைய மகள் செய்த சாதனை குறித்து பெருமையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் தன்னுடைய இளைய மகள் 14 வயதிலே சொந்தமாக புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள்தான் வனிதா. இவர் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் உடன் நடித்திருக்கிறார்.
சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாகவே இருந்த நேரத்தில் இவர் திடீர் திருமணம் செய்து இருந்தார்.
வனிதாவின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் அனைவருக்குமே தெரிந்ததுதான். அடிக்கடி செய்தி சேனல்களில் இடம் பிடித்து விடும் வனிதாவின் குடும்ப பிரச்சனை. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் அறிமுகம் ஆகி சின்னத்திரை பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கும் வனிதா youtube சேனல்களிலும் பலரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ஆகாஷை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட வனிதா 2007 ஆம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்தார். நடிகர் ஆகாஷூடன் ஒரு மகன் மற்றும் மகளை வனிதா பெற்று எடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார்.
ஆனந்த் ஜெயராஜனுக்கும் வனிதா விஜயகுமாருக்கும் பிறந்த மகள் தான் ஜெனிதா ராஜன். ஆனால் ஆனந்த் ஜெய் ராஜனையும் 2012 ஆம் ஆண்டு வனிதா விவாகரத்து செய்து பிரிந்திருந்தார். இந்த நிலையிலும் தன்னுடைய இரண்டு மகள்களையும் தானே வைத்திருக்க விரும்புவதாக கூறியிருந்தார். ஆனால் தனது மகளை ஜெய் ஆனந்த் ராஜன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தன்னிடமே வைத்துக் கொள்ளும் வகையில் செய்துவிட்டார்.

இந்த நிலையில் வனிதாவின் மூத்த மகள் மட்டும் அவரோடு இருக்கிறார். அதே நேரத்தில் அடிக்கடி இரண்டாவது மகளும் வனிதாவை வந்து சந்தித்துக் கொள்வது வழக்கம்தான். இந்த நிலையில் வனிதாவின் இளைய மகள் ஜெனிதா ராஜன் புத்தகங்களை எழுதி வெளியிடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜெனிதா புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட இதனை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் 14 வயசிலே உங்க மகளுக்கு இப்படி ஒரு திறமையா? என்று கூறி ஆச்சரியத்துடன் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
நான் சின்ன பையன்.. சூர்யாவுக்கு தான் பாதிப்பு! கருப்பு படத்தில் தர்பூசணி காட்சி கட்.. திவாகர் வினோத விளக்கம் -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications