நிக்கோலை திருமணம் செய்ய காரணமே இதுதான்! “நார்வே”யில் நடந்த சம்பவம்.. நடிகை வரலட்சுமி ஓப்பன் அப்
சென்னை: நடிகர் சரத்குமார் மகளான வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு கடந்த மாதத்தில் எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. எங்கேஜ்மென்ட்க்கு பிறகு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது நிக்கோலாய் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை வரலட்சுமிக்கு மும்பையை சார்ந்த தொழிலதிபராண நிக்கோலாய் சச்தேவ் என்பவரோடு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏற்கனவே நிக்கோலாக்கு திருமணம் முடிந்து 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் நிக்கோலாயை இரண்டாவது தாரமாக வரலட்சுமி திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்திகள் வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.

அதே நேரத்தில் நிக்கோலாய் குறித்து சில தகவல்களும் வெளியாகி இருந்தது. அதாவது தொழிலதிபரான நிக்கோலாய் 16 வயதினிலே தன்னுடைய தந்தையின் பிசினஸை கவனித்து வருகிறார். அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அதோடு கவிதா கலிபோர்னியா நாட்டின் உலக அழகி பட்டத்தையும் பெற்று இருக்கிறார்.
ஆனால் தனிப்பட்ட காரணத்தால் இருவருக்கும் இடையே விவாகரத்து ஆகி விட்டது. இந்த நிலையில் நிக்கோலாயை நடிகை வரலட்சுமி பணத்துக்காக தான் திருமணம் செய்கிறார் என்று இணையத்தில் சிலர் கருத்து வெளியிட்டு வந்த நிலையில் இது குறித்து வரலட்சுமி சமீபத்தில் பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் என்னை பற்றி நெகட்டிவாக இணையத்தில் பரவும் கருத்துக்களை பற்றி நான் கண்டு கொள்வதே கிடையாது.
நான் என்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். என்னுடைய வருமானத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிகோலாயை நான் திருமணம் செய்யப்போவது பணத்திற்காக என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதே பணம் என்னிடமும் இருக்கிறது. நான் எதற்காக பணத்திற்காக இன்னொருவரை திருமணம் செய்ய வேண்டும்.
நான் ஆரம்பத்தில் திருமணம் எனக்கு இப்போதைக்கு விருப்பமில்லை என்று சொல்லி இருந்தேன். ஆனால் எனக்கு சரியான ஒரு நபரை பார்த்த போது அவரை திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன் அவ்வளவு தான். மற்றபடி சிலர் அவர்களுடைய கற்பனைக்கு கண்டபடி எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நான் திருமணம் செய்யவில்லை. நான் 16 ஆண்டுகளுக்கு முன்பு நிக்கோலாயை சந்தித்து இருக்கிறேன்.
இருவரும் அப்போது நட்பு ரீதியாக பேசினோம். அந்த நேரத்தில் நிக்கோலாய் அவருடைய மனைவியோடு தான் வாழ்ந்து வந்தார். எங்களுக்குள் எந்த ஒரு நெருக்கமும் கிடையாது. நான் என்னுடைய வேலையை பார்த்து தனியாக இருந்தேன். அவர் அவருடைய வேலையை பார்த்தார். அதற்கு பிறகு இப்போது சில மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் இருவரும் நேரில் பார்த்தோம். எங்களுக்குள் ஒரு பிடித்தம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் அவருடைய பரிவு மற்றும் பாசம், என்னுடைய ப்ரொபஷனல் மீது அவருக்கு இருக்கும் அக்கறை எல்லாவற்றையும் பார்த்து தான் எனக்கு காதல் வந்தது. அப்போது கூட அவர் என்னுடைய அப்பா அம்மாவை நேரில் சந்தித்து என் மீது அவருக்கு இருக்கும் காதலை சொல்லி இருக்கிறார். பிறகு ஒரு முறை நார்வேயில் நாங்கள் பேமிலி டூர் போயிருந்தோம். அங்கு வைத்து தான் அப்பா அம்மா முன்னாடி என்னிடம் நிக்கோலாய் காதலை சொன்னார்.
அதே நேரத்தில் அவர் என்னுடைய உறவினர் கிடையாது. சிலர் அப்பாவுடைய நண்பர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கிடையாது. சிலர் அப்பாவை போலவே நிக்கோலா இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அது உண்மையில் எனக்கு சந்தோஷம்தான். எனக்கு அப்பாவை பிடிக்கும்... எனக்கு மட்டும் இல்ல பல பெண்களுக்கு அப்பாவை பிடிக்கும். அதனால் அப்பாவை போன்று இருக்கும் நபரையும் பிடிக்க தானே செய்யும் என்று அந்த பேட்டியில் நடிகை வரலட்சுமி பேசியிருக்கிறார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications