நடிகை வேதிகாவுக்கு திடீர் கல்யாணமா? அவரே வெளியிட்ட வீடியோ.. மாப்பிள்ளை? குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை வேதிகா தனக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் இது உண்மையா? அல்லது பொய்யா? என்று கண்டுபிடிங்க என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை சிம்ரனுக்கு அடுத்ததாக இடுப்பழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை வேதிகா இன்று வெளியிட்டுள்ள வீடியோ தான் இணயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் பிறந்த நடிகை வேதிகா 2006 ஆம் ஆண்டு மதராசி என்ற தமிழ் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இடம் பிடித்த பாடல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது. அதிலும் கருப்பு பேரழகா பாடல் பல கருப்பு இளைஞர்களின் காலர் டியூனாக இருந்து வருகிறது. அந்த திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பல பத்திரிகைகளின் அட்டை படங்களில் வேதிகா இடம் பிடித்திருந்தார்.
முனி திரைப்படத்தை தொடர்ந்து வேதிகா சிம்புவுக்கு ஜோடியாக காளை, சக்கரகட்டி, காவியத்தலைவன், காஞ்சனா 3 பேட்ட ராப் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அதுவரைக்கும் நடித்து வந்த வேதிகாவின் இன்னொரு முகத்தை பரதேசி படத்தில் வேறு விதமாக பாலா காட்டியிருந்தார். வேதிகாவால் கிராமத்து கேரக்டரில் அசத்த முடியும் என்று அந்த படம் நிரூபித்து இருந்தது.
திரையுலகில் 18 வருடங்களுக்கு மேலாக பயணித்து வரும் வேதிகா இப்போது ஓடிடியிலும் தடம் பதிக்க துவங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமணம் நடக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இது நிஜமா அல்லது பொய்யா என்று கண்டுபிடிங்க என்று வேதிகா ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதை பார்த்ததும் பலரும் இது கண்டிப்பாக உண்மையாக இருக்காது, அது பொய்யாக தான் இருக்கும் என்று அடித்து கூறி வருகிறார்கள் அதுவும் பல வருடங்களுக்கு முன்பே உள்ள வீடியோ இது ஆனால் எந்த படத்தில் உள்ள கிளிப்ஸ் என்று தான் தெரியவில்லை என்று பலரும் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
அதுபோல வேதிகா சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தாலும் சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் வேதிகாவின் இந்த திடீர் திருமண வீடியோ தான் இப்போது பலர் பேசும் டாபிக்காக மாறி இருக்கிறது.
இது நிஜத்தில் வேதிகாவிற்கு நடந்த திருமணமா? அல்லது இது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட சூட்டிங்கா என்பது பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. இது பற்றிய உண்மைகளை வேதிகா விரைவில் கூறினால் நன்றாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications