ஆர்ஜே ரவி பற்றி சக நடிகை வெளியிட்ட பதிவு..இது என்ன புது ட்விஸ்ட்.. எதிர்பார்க்காத பதிலடி
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் சம்யுக்தா ஆர்ஜே ரவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பேசிய ஆடியோ ஒன்றை விஷ்ணுகாந்த் வெளியிட்டிருக்கிறார்.
அதை மறுத்து ஆர்ஜே ரவி பதிவு வெளியிட்ட நிலையில் அதை பகிர்ந்து ரவிக்கு ஆதரவாக சக நடிகை ஒருவர் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

சின்னத்திரை பிரபலங்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சனை சமீப காலமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சம்யுக்தா பற்றி பல அதிர்ச்சிகரமான ஆடியோ பதிவுகளை விஷ்ணுகாந்த் அடுத்தடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அதில், சம்யுக்தா இன்னொரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் ஆர்ஜே ரவி தான் காதலிக்கிறேன் என்று சொன்னதும் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்றும் சக நண்பர்களிடம் புகார் அளித்திருக்கிறார். அவர்கள் எல்லாரும் சம்யுக்தாவிற்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்திருக்கின்றனர். ஆனால் சம்யுக்தா அப்போது அவர்களிடம் ரவியை காதலிக்கவில்லை என்று கூறிவிட்டு விஷ்ணுகாந்திடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
அதே நேரத்தில் ரவி இடமும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அதற்கு விளக்கம் கேட்ட சம்யுக்தா நண்பரிடம் என்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி ரவி வாயிலிருந்து ஒத்துக்கொள்ள வைப்பதற்காகத்தான் பேசினேன் என்று அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார். தற்போது இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
காரணம் நிறைமாத நிலவே என்ற வெப் சீரிஸ் மூலமாக சம்யுக்தா எந்த அளவிற்கு பிரபலமடைந்தாரோ அது போலவே ஆர்ஜே ரவியும் பிரபலமடைந்து இருந்தார். அவர் அதைத் தொடர்ந்து பல வெப்சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக காதலே காதலே என்ற வெப் சீரிஸ் மூலமாகவும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதனால் இவருக்கு அதிகமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர்.
.
இந்த நிலையில் ரவி பற்றி சம்யுக்தா சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பெண் ரசிகைகள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறக்கவில்லை. நான் தவறாக சம்யுக்தாவிடம் நடக்கவில்லை. என்னை பற்றி தப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் நீண்ட ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் காதலே காதலே வெப் சீரிஸில் ரவியுடன் நடிக்கும் நடிகை வெண்பா, ரவி வெளியிட்ட பதிவை பகிர்ந்து தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெண்பாவிற்கு ரவியின் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications