குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு திடீரென பாதியிலே வெளியேறிய போட்டியாளர்..இதுதான் காரணமாம்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடிகர் விசித்ரா சொந்த பிரச்சனையின் காரணமாக வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் இம்முனிட்டி பேண்ட் பெறுவதற்கான போட்டிகள் நடைபெற்று இருக்கிறது.
இதில் கலந்துகொண்ட நடிகை விசித்ரா பாதியில் திடீரென வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குடும்பத்தில் எமர்ஜென்சி என அழைப்பு வந்ததால் இவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

குக் ஆனா சிவாங்கி
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பல புது முகங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். எப்போதும் போல கலந்து கொண்ட ஒரு சில கோமாளிகள் இந்த சீசனிலும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதே நிலையில் இதுவரைக்கும் கோமாளியாக இருந்த சிவாங்கி முதல்முறையாக குக்காக மாறி இருக்கிறார். தான் குக்காக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்பெஷல் கோர்ஸ் எல்லாம் முடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று ஆரம்பத்திலேயே கூறி இருந்தார்.

பாதியில் வெளியேற்றம்
இந்த நிலையில் இந்த சீசனில் தற்போது நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் இம்முனிட்டி பேன்ட் பெறுவதற்கான போட்டிகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வழக்கம்போல கோமாளிகள் போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் என எல்லோரும் ஷோவிற்க்கு வந்த நிலையில் நடிகை விசித்ரா மட்டும் பாதியில் வெளியேறி இருக்கிறார்.

வெளியேற்றத்திற்கான காரணம்
புதிய குக்காக அறிமுகமான அறிமுகமான விசித்ரா குடும்பத்தில் எமர்ஜென்சி என அழைப்பு வந்திருந்ததாம். அதனால் தான் இவர் பாதியிலே வெளியேறி இருக்கிறார் என்றும், இவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக விசித்ரா சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகை விசித்திரா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

சீரியலில் அம்மா
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகனின் அம்மாவாகவும் வி சித்ரா நடித்து வருகிறார். அதே நேரத்தில் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவருடைய சமையல் மற்றும் சில டிப்ஸ்கள் கொடுப்பதை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென இவர் வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications