தாலியை கழட்டிட்டு நடிக்கணும்னா என்னால் முடியாது.. பளீரென பேசிய சன் டிவி சீரியல் நடிகை..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் வித்யா பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
நடிப்பிற்காக தான் என்ன வேணாலும் செய்யும் கேரக்டர் கிடையாது அதுவும் குறிப்பாக தன்னுடைய கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
தன்னுடைய கணவர் முதல் முதலாக தனக்கு தந்தது. அதனால் அதை கழற்றி விட்டு நடிக்க சொன்னால் அப்படி ஒரு ப்ராஜெக்ட் தேவையில்லை என்று கூறி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

சன் டிவி சீரியல் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நீயும் நானும் சீரியலில், மீனா கேரக்டரில் நடித்து வரும் வித்யா வினு மோகன் கேரளாவை சேர்ந்தவராம். இவர் இதுவரைக்கும் 30-க்கும் மேற்பட்ட தமிழ் மலையாளம் சீரியல்களில் நடித்துள்ளார். வித்யாவின் கணவர் பெயர் வினு மோகன். இவரும் ஒரு நடிகர் தானாம் 2017 வெளியான மலையாள திரைப்படத்தில் முதலில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்துள்ளார்களாம். அதற்குப் பிறகுதான் இவர்கள் இருவரும் காதலித்து திருமணமும் செய்துள்ளார்களாம். வித்யா எப்போதுமே தன்னுடைய கணவர் மீது மிகுந்த பாசத்தோடு இருந்து வருகிறாராம்.

வள்ளி சீரியலில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி சீரியல் மூலமாக இவர் தமிழ் சீரியலுக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.அந்த சீரியலில் இவர் இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறார். வள்ளி மற்றும் வெண்ணிலா என்ற இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு தற்போது அபியும் நானும் சீரியலில் மீனா கேரக்டரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிக்கும் ஒரு கேரக்டராக இருந்து வருகிறார். ஆனால் இவர் உண்மையிலும் மீனாவை போன்று தான் கேரக்டரோடு இருந்து வருகிறாராம். இவருக்கு குடிப்பவர்களை கொஞ்சம் கூட பிடிக்காதாம் குடிப்பவர்கள் நேரில் வந்தாலும் அவர்களோடு பேசவே மாட்டாராம்.

அடிக்கடி கிடைக்கும் கிப்ட்
வித்யா தன்னுடைய கணவர் மீது அதிகமான பாசம் வைத்து இருப்பதால் இவர் சூட்டிங் முடிந்து வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவருக்கு பல கிப்ட்களை வாங்கிக் கொண்டு செல்வாராம். அதை அவருடைய கணவர் அணிந்திருப்பதை பார்க்கும்போது மனதிற்குள் ஒரு சந்தோஷம் ஏற்படும். அது போதும் என்று கூறியிருக்கிறார் .அது மட்டுமில்லாமல் தன்னுடைய கணவர் டென்ஷனாக இருக்கும்போது எதையுமே அவரிடம் பேச மாட்டாராம். கணவரின் மனதை அறிந்து அதற்கு தகுந்த மாதிரி தான் தனக்கு தேவையானதை பேசிக்கொள்வதாக கூறியிருக்கிறார்.

தாலி சென்டிமென்ட்
தான் சீரியலில் நடிக்கும் போது தன்னுடைய தாலியை கழட்டுவதே இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் கழுத்தில் போட்டிருக்கும் செயின் கேரள முறைப்படி கட்டிய தாலியாம். இதை கழட்டி விட்டு தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னால் எனக்கு அந்த மாதிரி ஒரு ப்ராஜெக்ட் தேவையே இல்லை என்று சொல்லி விடுவேன். எனக்கு இது என்னுடைய கணவர் முதல் முறையாக வாங்கி தந்தது. அதனால் அதை கழட்ட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இவர் பேசிய இந்த வீடியோவை பிடித்துப் போன சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைத்தால் போதும் என்று இவர்கள் பெருமூச்சு விட்டு வருகிறது கமெண்ட்களில் தெரிகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications