எல்லா படத்திலும் உருவ கேலி தான் செஞ்சாங்க.. தனுஷ் மட்டும் தான் அதை பண்ணல.. நடிகை வித்யூலேகா உருக்கம்
சென்னை: நடிகை வித்யூலேகா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து எல்லா நடிகர்களும் என்னை பாடி ஷேமிங் செய்துதான் கலாய்த்தார்கள். ஆனால் தனுஷ் மட்டும் தான் அதை செய்யவில்லை என்று தனுஷ் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். அதோடு சினிமா வாழ்க்கையில் தான் சந்தித்த பல பிரச்சனைகள் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பொதுவாக ஒரு சிலர் காமெடி என்கிற பெயரில் அடுத்தவர்களை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி பேசி வருகிறார்கள். அதைமும் சிலர் காமெடி என்று நம்பி கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் முகம் சுளித்தாலும் இது போன்று அடுத்தவர்களை மட்டம் தட்டி காமெடி செய்பவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். ஆனால் அது போன்று உருவ கேலி செய்யப்படுபவர்களுக்கு எவ்வளவு வேதனைகள் இருக்கும் என்பது அடுத்தவர்களுக்கு புரிவதில்லை.

முடிவில்லாத உருவ கேலி
பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்களிலும் தான் மாஸாக இருக்க வேண்டும் என்று சிலர் மற்றொருவரை உருவ கேலி செய்வதை பார்த்திருப்போம். இதுபோன்று உருவ கேலியால் பாதிக்கப்படுபவர்கள் வருத்தத்தில் தற்கொலை முயற்சி வரைக்கும் எடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் அது தவறு என்று சிலருக்கு புரிவதில்லை. அதுபோல தான் வித்யூலேகா சினிமாவில் தான் சந்தித்த பாடி ஷேமிங் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
சினிமாவில் பாடி ஷேமிங்
அதில் அவர் பேசும்போது நான் நடித்த எல்லா படங்களிலும் என்னை பாடி ஷேமிங் செய்தார்கள். ஆனால் ஒரே ஒரு படத்தில் தான் என்னை பாடி ஷேமிங் செய்யவில்லை. அது தனுஷின் பவர் பாண்டி படத்தில் தான். பாடி ஷேமிங் செய்கிறார்கள் என்று இயக்குனரிடம் சொன்னால் கூட, சரிமா நான் வேற நடிகையை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுவார்கள். அதன் விளைவு எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதனால் எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

சந்தானத்துடன் நடிப்பு
அதோடு நடிகர் சந்தானத்தோடு ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்துவிட்டு இப்போது அவருடன் நடிப்பதிலேயே ஏன் என்ற கேள்விக்கும் பதில் கொடுத்திருந்தார். அதில் சந்தானம் ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்தார். அப்போது அவரோடு பல படங்களில் நான் ஜோடியாக நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர் கதாநாயகனாக மாறிவிட்டார். அதனால் அவர் இனி என்னுடன் நடிப்பாரா என்று எனக்கே தெரியல என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களின் பாராட்டு
வித்யூலேகா பேசியதை வைத்து தனுஷ் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். நடிகர் தனுஷ் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்தாலும் இப்போது நடிகை வித்யூலேகா பேசியது பலராலும் பாராட்ட பெற்று வருகிறது. தனுஷ் சினிமா துறையில் கதாநாயகனாக அறிமுகமாகிய பொது பல்வேறு உருவ கேலிகளை சந்தித்திருந்தார். அதன் காரணமாகவே அவருடைய திரைப்படங்களில் அவர் அதை அடுத்தவர்களுக்கு செய்யவில்லையா என்றும் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
பல திறமை
தனுஷ் இப்போது பல்முக திறமையோடு விளங்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக அசுரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய நடிப்பு வித்தியாசமாக இருக்கிறது. அவர் இயக்கிய ராயன், பவர் பாண்டி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் தன்னுடைய மருமகனை வைத்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும் இப்போது இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் தனுசுக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் குறித்து நடிகை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications