விஜய் அண்ணா என்னையும் கட்சியில் சேர்த்துக்கோங்க.. ஏன்னா இதுதான் காரணம்..! நடிகை விஜயலட்சுமி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க மிக அருகில் உள்ளது. இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய சக்தி உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Vijayalakshmi TVK Tamil Nadu Politics

நடிகை விஜயலட்சுமி வீடியோ

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவர், "வாழ்த்துகள் விஜய் அண்ணா... மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளீர்கள். தவெகவில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அவர்கள் அளித்த தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தங்கச்சி வேண்டுகோள்

மேலும் அவர் தனது வீடியோவில், "நான் சென்னையில் இருந்திருந்தால் நேரில் வந்து விஜய் அண்ணாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருப்பேன். என்னையும் தவெகவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் உங்களைப் போல மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கேட்டிருப்பேன். தற்போது என் குடும்பத்தில் எங்க அக்காவின் உடல்நிலை பிரச்சனை இருப்பதால் வெளியில் வர முடியவில்லை. இருந்தாலும் மக்களின் நம்பிக்கை வீணாகாமல் நல்ல ஆட்சி வழங்க வேண்டும்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரண்ட்ஸ் திரைப்படம்

விஜயலட்சுமி நடிகர் விஜயுடன் உடன் பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் அவருடைய தங்கச்சியாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இப்போது அவர் குடும்ப சூழ்நிலையால் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சீமான் குறித்து தொடர்ச்சியாக பல வீடியோக்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருவார். சமீபத்தில் நடந்த தேர்தலில் சீமான் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில் அது குறித்து விஜயலட்சுமி வீடியோ வெளியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், கடைசியில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் பெற்ற வெற்றி

இந்த தேர்தலில் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி 73 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், அதிமுக மூன்றாவது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டாலும், அது கிடைக்கும் என்ற நம்பிக்கை தவெக வட்டாரத்தில் வலுவாக உள்ளது.

இந்த வெற்றிக்கு காரணமாக மக்கள் மனநிலையே முக்கியமாக பார்க்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்களின் பெயரே தெரியாமல், "விஜய்க்காக வாக்களிக்கிறோம்" என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கட்சி தொடங்கி சில ஆண்டுகளிலேயே 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், விஜய் சட்டமன்றக் கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் இந்த அரசியல் வெற்றி குறித்து பல தரப்பினரிடமும் கலவையான கருத்துகள் எழுந்துள்ளன. சிலர் இதை "இளைஞர்களின் மாற்ற அரசியல்" என பாராட்டுகின்றனர். மேலும் சிலர், "இந்த வெற்றி மக்களின் எதிர்பார்ப்பை காட்டுகிறது; அதை நிறைவேற்றுவது மிகப்பெரிய பொறுப்பு" என்று கூறுகின்றனர்.

மொத்தத்தில், விஜய் தலைமையிலான தவெக, தமிழ்நாட்டில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து, ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த வெற்றி ஒரு தொடக்கமா அல்லது நீண்டகால அரசியல் மாற்றத்திற்கான அடிப்படையா என்பது அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகளில் தான் தெளிவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+