என்னை செருப்பால அடிப்பியா? இன்ஸ்டா பிரபலம் மீது புகார் கொடுக்க போறேன்.. நடிகை விஜயலட்சுமி வீடியோ
சென்னை: நடிகை விஜயலட்சுமி சில நாட்களுக்கு முன்பு இனி நான் சீமானுக்கு ஆதரவு கொடுக்க போறேன் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இது பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இப்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதிலும் வணக்கம் டா மாப்பிள்ளை என்று சோசியல் மீடியாவில் பிரபலமான நபர் மீது நான் புகார் கொடுக்கப் போகிறேன் என்று அவர் சொல்லி இருக்கிறார். இதுதான் இப்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை விஜயலட்சுமி பல வருடங்களாகவே சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார். அவர் மீது புகார் கொடுத்திருந்தார். கடைசியில் அதை வாபஸ் வாங்கி விட்டார். இந்த நிலையில் தான் நடிகர் விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்த பிறகு அவருக்கு சப்போர்ட்டாகவே வீடியோ வெளியிட்டு வந்தார். அவர் முதலமைச்சர் ஆனதும் என்னுடைய அண்ணன் ஜெயித்துவிட்டார் இனி தமிழகத்திற்கு பெரிய மாற்றம் வரப்போகிறது என்று சந்தோஷமாக பேசி இருந்தார்.

நடிகை விஜயலட்சுமி வீடியோ
அடுத்த சில நாட்களில் நான் விஜய் அண்ணனை நேரில் சந்திக்கும்போது நானும் உங்க கட்சியில் இணைய போகிறேன் என்று சொல்லவேன் என்றெல்லாம் பேசி இருந்தார். சமீபத்தில் கூட ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தை பாராட்டியும் பேசி இருந்தார். அப்போது கூட அந்த படத்தில் விஜிமா தைரியமா இரு என்று விஜய் அண்ணா பேசுறது எனக்கே அவர் அட்வைஸ் சொன்னது போல இருக்கிறது.
திடீர் மன மாற்றம்
எனக்கு இருக்கிற பிரச்சனையை உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். இந்த சமயத்தில் அவர் எங்கோ இருந்து எனக்கு ஆறுதல் சொன்னது போல இருக்கிறது என்று உரிமையுடன் அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். இப்படியான நிலையில் தான் திடீரென நேற்றைய முன்தினம் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் நடிகை திரிஷாவுக்கு சப்போர்ட் செய்து சிலர் என்னை வைத்து சீமானை விமர்சிக்கிறார்கள். அதனால் என்ன கேவலப்படுத்தி விட்டார்கள் இனி நான் சீமாவுக்கு சப்போர்ட் பண்ண போகிறேன் என்று கூறியிருந்தார்.
சீமானுக்கு ஆதரவு
சீமான் இடைத்தேர்தலில் ஆலங்குளம் பகுதியில் போட்டியிடப் போகிறார். அப்போது என்னுடைய முழு ஆதரவுமீ அவருக்குத்தான், அவரும் வெற்றி பெற வேண்டும் அவர் உச்ச நீதிமன்ற கருத்துக்களை மதித்து நடக்கிறார் என்று பேசியிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது. இதுவரைக்கும் சீமான் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென மனம் மாறிவிட்டாரே என்று அதிசயப்பட்டனர். இதற்கு இடையில் இப்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை விஜயலட்சுமி சவால்
அதில், வணக்கம் டா மாப்ள என்று சோசியல் மீடியாவில் பிரபலமான ஒருவர் இருக்கிறாரே அவர் என்ன பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். என்ன செருப்பால அடிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். இனி விஜயை நான் அண்ணன்னு சொன்னா என்னை செருப்பால அடிப்பாராம். உனக்கு தைரியம் இருந்தா அடுத்த ஒரு வீடியோ வெளியீடு அதில் உன்னுடைய அட்ரஸ் போன் நம்பர் எல்லாவற்றையும் அதில் சொல்லு. நான் உனக்கு நோட்டீஸ் அனுப்புறேன். அப்புறமா நீ ஹைதராபாத் கோர்ட்டுக்கு வந்து என்னை எப்படி அடிப்பியோ அதை வந்து சொல்லு என்று அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியிருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications
