சிம்பு என் தம்பி தான்..நயன்தாரா தைரிய லட்சுமி.. தனுஷ், திரிஷா கூட இப்படித்தான்..!நடிகை விந்தியா ஓபன்
சென்னை: நடிகை விந்தியா பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது தற்போதுள்ள நடிகர், நடிகைகளில் நடிகர் தனுஷ், சிம்பு, நயன்தாரா, திரிஷா, விஜய், அஜித் போன்ற பலரைப் பற்றியும் தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகை விந்தியா 17 வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அவர் சினிமாக்களில் நடிக்கவில்லை. அவர் நடித்த சங்கமம் திரைப்படத்தை 90ஸ் கிட்ஸ் இப்போதும் கொண்டாடி வருகிறார்கள். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் எவர்கிரீன் பாடல்களாக இடம் பெற்றிருக்கிறது. அதிலும் "மார்கழி திங்கள் அல்லவா" பாடல் இப்போதும் பல கலை நிகழ்ச்சிகளில் முதலாவதாக பாடப்படும் பாடலாக இருக்கிறது.

சினிமாவின் புகழின் உச்சத்தில் இருக்கும்போது விந்தியா சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதற்கு பிறகு இப்போது அவர் சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் நடன இயக்குனரான கலா மாஸ்டர் தான் விந்தியாவிடம் பேட்டி எடுத்திருக்கிறார். அவர் இன்றைய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தனக்கே உரிய வகையில் டக்கு டக்குவென்று பதில் சொல்லி இருக்கிறார்.
அதிலும் நடிகை விஜய்யை பற்றி கேட்கும் போது "விஜய் எப்போதுமே தாளம் தப்பாமல் டான்ஸ் ஆடுறவர். அவர் ரசிகர்ளுக்கு ஏற்ப டான்ஸ் ஆட தெரிந்தவர். இன்னைக்கு இருக்கிற இளைஞர்களுக்கு தளபதி.. முக்கியமா துண்டு சீட்டு இல்லாமல் பேசக்கூடிய தளபதி" என்று சொல்லியிருக்கிறார். அதைத்தொடர்ந்து அஜித் பற்றி பேசும்போது, "தகுதி இருக்கிறவங்களுக்கு தலைவணங்குறதுக்கு தயங்க மாட்டார். தப்புன்னு தெரிஞ்சா எதிர்க்கறதுக்கும் தயங்க மாட்டார், மலை மாதிரி தான். எப்போதுமே தல, தல தான்".
அதுபோல சிம்பு "சகலகலா வல்லவனின் மகன். ஆனால் என்ன பண்றது என் தம்பிக்கு எப்போதுமே ஏதாவது ஒரு தொல்லை வரும்" என்று சிரித்தபடியே சொல்லிய விந்தியா சிம்புவை தொடர்ந்து தனுஷ் பற்றி பேசியிருக்கிறார். அப்போது "தனுஷ் என்றாலே அவர் ஒரு அசுரத்தனமான திறமை கொண்டவர் என்று நினைவூட்டுகிறார். புல்லு போல முளைச்சார்ன்னு நினைச்சவங்களுக்கு ஆலமரமா பரந்து நின்னு நிரூபிச்ச ஒரு உண்மையான உழைப்பாளி" என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

அதுபோல நடிகைகளில் திரிஷாவை பற்றி சொன்னால் "அவர் 20 வருஷமாக இளமையாகவே இருக்கிற ஒரு சிறந்த நடிகை". "நயன்தாரா என்றால் வலிகள் எல்லாவற்றையும் வழிகளாக மாற்றி தன்னை எதிர்த்தவர்களை ஏறி மிதித்து ஜெயித்து தைரியமாக நிற்கிற கேரளா தந்த ஒரு தைரிய லட்சுமி".
அதுபோல நடிகை "குஷ்பு மனசில் பட்டதை பேசிடுவாங்க .என்னுடைய அன்பான தோழி. வலிகள் ஆயிரம் இருந்தாலும் வெளியில் தெரியாமல் மறைத்து வளரும் புன்னகை அரசி அவங்க தான்" என்று பேசிக் கொண்டிருந்த வித்யா தன்னுடைய அம்மாவாக கருதும் "ஜெயலலிதாவை பற்றி பேசும்போது எனக்கு முகவரி தந்த கடவுள்" என்று அவரை பற்றி பேசும்போது கண்கலங்கி இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications