நடிகர் சங்கம் உதவல.. கணவரை விபத்து ஏற்படுத்திய நபர்கள்.. கண்ணீரோடு நடிகை வினோதினி
சென்னை: வண்ண வண்ண பூக்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை வினோதினி தன்னுடைய கணவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து கண்ணீரோடு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
முகம் தெரியாத இரண்டு நபர்கள் தன்னுடைய கணவர் மீது பைக்கில் மோதி விட்டு சென்று விட்டதால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து வினோதினி பேசியிருக்கிறார்.

அதோடு தான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கும் நிலையிலும் தனக்கு நடிகர் சங்கத்திலிருந்து எந்த உதவியும் செய்யவில்லை. தன்னுடைய கணவருக்கு விபத்து ஏற்படுத்தியவர்களை கண்டுபிடிப்பதற்காக யாருமே உதவி செய்யவில்லை என்று வினோதினி குற்றம் சாட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை தான் வினோதினி. இவர் மணல் கயிறு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த வண்ண வண்ண பூக்கள் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த வினோதினி இப்போது சீரியல் களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியான சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய கணவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது அப்போது ரோட்டில் என்னுடைய கணவர் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும்போது 20 வயது மதிப்புள்ள இரண்டு நபர்கள் பைக்கில் வந்து என் கணவர் மீது மோதி விட்டனர்.
ரோட்டோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதி விட்டு அவர்கள் போய்விட்டார்கள். எங்களுக்கு வேறு எந்த தகவலும் தெரியாது. விபத்தை ஏற்படுத்தியவர்கள் அடுத்த நாள் கோர்ட்டில் பத்தாயிரம் ரூபாயை அபராதமாக செலுத்தி விட்டு போய் விட்டார்கள். ஆனால் நாங்கள் அந்த ஆக்சிடென்ட்க்கு பிறகு பட்ட வேதனை சொல்ல முடியாதது.
என்னுடைய குடும்பத்தில் இருந்தும் சரி என்னுடைய கணவர் குடும்பத்திலிருந்து சரி எங்களுக்கு யாருமே உதவி செய்யல. ஏதாவது வேண்டுமா என்று மட்டும் போனில் கேட்டார்களே தவிர எதுவும் செய்யவில்லை. என்னுடைய கணவர் அந்த விபத்தில் இருந்து மீண்டு வருவதற்கு ரொம்பவே கஷ்டப் பட்டார். ஒரு வருடங்களுக்கு என்னால் அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை.
நான் வேலையும் பார்க்க வேண்டும், குழந்தைகளை பார்க்க வேண்டும், என்னுடைய கணவரையும் பார்க்க வேண்டும், குடும்ப செலவுகளையும் பார்க்க வேண்டும். எல்லா பொறுப்புகளும் என்னுடைய தலையிலேயே விழுந்தது. ஆனாலும் நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும் ஒரு சிலர் மட்டும்தான் வந்து பார்த்தார்கள்.
ரச்சிதா தினேஷை பிரிவதற்கு முக்கிய காரணமே இதுதானா? அந்த சீரியலால் வந்த வினையா? இத்தனை நடந்திருக்கா?
ஒருவேளை அனைவரும் சேர்ந்து வந்திருந்தால் விபத்து ஏற்படுத்தியவர்கள் யார் என்று கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் அப்படி எதுவுமே செய்யவில்லை. அதுபோல அந்த நேரத்தில் எப்படியாவது என் கணவரை காப்பாற்றி என் குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்தது என்று கண்ணீரோடு அந்த பேட்டியில் வினோதினி பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications