ரச்சிதா தினேஷை பிரிவதற்கு முக்கிய காரணமே இதுதானா? அந்த சீரியலால் வந்த வினையா? இத்தனை நடந்திருக்கா?
சென்னை: சீரியல் நடிகையான ரச்சிதா அவருடைய கணவர் தினேஷை பிரிவதற்கான உண்மையான காரணம் இதுதான் என்று அவருடைய நெருங்கிய நட்பு வட்டாரங்கள் பேசிய தகவல்கள் தற்போது இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை ரச்சிதாவின் கணவரான தினேஷ் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். அதோடு இந்த சீசனில் டைட்டில் ஜெயித்ததும் தன்னுடைய மனைவியை சந்திக்க வேண்டும் என்ற ஆசையோடு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் ரச்சிதா மற்றும் தினேஷ் பிரிவதற்கு முக்கிய காரணமே நாச்சியார் புறம் சீரியல் தான் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதா மற்றும் தினேஷுக்கு சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய திருமண வாழ்க்கை பல வருடங்களாக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஒரு சில வருடங்களாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதற்கான காரணம் பற்றி இருவரும் வெளிப்படையாக பேசவில்லை. அதோடு பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக கலந்து கொண்ட போது தினேஷ் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்தார். அதோடு தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை இருவரும் மனம் விட்டு பேசினாலே சரியாக கூடியதுதான் என்றும் கூறியிருந்தார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இப்போது தினேஷ் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்து இந்த சீசனில் டைட்டில் ஜெயித்து அதை ரச்சிதாவிடம் கொண்டு கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ரச்சிதா தொடர்ச்சியாக தான் தினேஷோடு சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்கிற தோணியிலேயே பல பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரச்சிதாவின் நெருங்கிய வட்டாரங்கள் சிலர் ரச்சிதா மற்றும் தினேஷிற்கு இடையே பிரச்சனை உருவாவதற்கு காரணம் பற்றி பேசி இருக்கின்றனர்.

அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தினேஷ் மற்றும் ரச்சிதா இருவருமே ஆரம்பத்தில் அன்பாக இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் ரச்சிதா ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது தினேஷுக்கு வாய்ப்பு பெரியதாக கிடைக்கவில்லை. இதை ரச்சிதா பெரிதாக ஆரம்பத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் தினேஷ் செய்த ஒரு சில செயல்கள்தான் ரச்சிதாவிற்க்கு பிடிக்காமல் போய்விட்டது. சினிமா டைரக்ட் பண்ண போகிறேன் என்று சீரியல் தயாரிக்க இறங்கி இருந்தாராம். இதில் ரச்சிதாவிற்கு ஆர்வமில்லையால். தினேஷ் தொடர்ந்து வற்புறுத்தியதால்தான் ஜீ தமிழில் தினேஷ் தயாரித்த நாச்சியார் புறம் சீரியலில் ரச்சிதா நடித்திருந்தாராம்.
அந்த சீரியலும் பாதியிலேயே முடித்து விட்டார்கள். சீரியலை தயாரிப்பதற்காக தினேஷ் கடன் வாங்கி இருந்தாராம். கடன் கொடுத்தவர்கள் எல்லாம் தினேஷ் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கில் ரச்சிதா பெயரையும் சேர்த்து விட்டார்களாம். இதனால் ரச்சிதா ரொம்பவே கடுப்பாகி இருக்கிறார். பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை தொடங்கி இருக்கிறது.
அப்போது அந்த வழக்கிலிருந்து ரச்சிதா பெயரை தினேஷ் விடுவித்து இருக்கிறார். இருந்தாலும் இவர்களுக்கு இடையே பண பிரச்சனை பெரிதாக மாறி இருக்கிறது. வாய்ப்புகள் தினேஷுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை தான் சம்பாதித்த பணத்தை வீண் செலவு செய்ததுதான் பிடிக்கவில்லையாம். இதுதான் ரச்சிதா மற்றும் தினேஷ் பிரிவிற்கு காரணமாக இருந்தது என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications