Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸில் இருந்து வெளியேறனும்.. கதறி அழும் வினுஷா.. காரணம் இதுதானா? அவமானப்படுத்திய பிரதீப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த வினுஷா தேவி போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார்.

இந்த நிலையில் இன்று தான் நிகழ்ச்சியில் இருந்து விலகி வீட்டிற்கு போக வேண்டும் என்று பிக் பாஸிடம் அழுது இருக்கிறார்.

Actress Vinusha devi is crying to leave bigg boss tamil season 7

சில நாட்களாகவே தனக்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதாகவும் அதனால் தன்னை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வினுஷா வேண்டுகோள் வைத்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்றது. இதில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்ச்சயமானவர்களாகவும், இளம் போட்டியாளர்களாகவும் இருக்கின்றனர்.

இதனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கொடுக்கும் என்று நினைத்து இருந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர். முதல் வாரத்திலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் எலிமினேஷன் வைக்கப்பட்டு நடிகை அனன்யா வெளியேற்றப்பட்டார்.

அவரை தொடர்ந்து அடுத்த நாளே பவா சொல்லத்துரை தன்னுடைய உடல் நலத்தை காரணம் காட்டி அவரும் வெளியேறி இருந்தார். இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் வினுஷா கடைசி இடத்தில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் கடைசி நாளில் என்ன வேணாலும் மாற்றம் நடக்கலாம் என்பது ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் பார்த்துக் கொண்டிருப்பது தான். ஆனால் இன்று சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வினுஷா தான் வீட்டிற்கு போகவேண்டும். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பிக் பாஸிடம் பேச வேண்டும் என்று கேட்டிருந்தார். அதனால் பிக் பாஸ் அவரை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிட்டு இருக்க, அங்கு அவர் என்னால் இனி எங்கே இருக்க முடியாது.

Actress Vinusha devi is crying to leave bigg boss tamil season 7

எனக்கு ஏற்கனவே சைனஸ் பிரச்சனை இருக்கிறது. இங்கு ஏசி எனக்கு சேரவில்லை. அதனால் முகத்தில் வலி அதிகமாக இருக்கிறது. என்னுடைய குடும்பத்தை நான் தேடுகிறேன். வெளியே இருக்கும் அம்மா பாட்டி ஞாபகமா இருக்கு என்றெல்லாம் பேச, அதற்கு பிக் பாஸ் வழக்கம் போல நீங்க கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி உங்களுக்காக வார்னிங் கொடுப்பதற்காக மட்டுமல்ல உங்களை எல்லாம் கவனிப்பதற்காக தான் நான் இருக்கிறேன்.

என்றெல்லாம் பிக் பாஸ் பேசி பார்த்தார். அதை தொடர்ந்து வெளியே எல்லா போட்டியாளர்களும் வினுஷா இப்போது அப்படியே போய்விடுவாள் என்று பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மாயா கண்டிப்பா இந்த வாரம் வினுஷா போக மாட்டாள். விசித்ரா தான் போவாங்க. எதற்காக வினுஷா இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா, இந்த வாய்ப்புக்காக வெளியே எத்தனை பேரு காத்திருக்காங்க என்று சொல்கிறார்.

அதற்கு பிரதீப் சற்றும் யோசிக்காமல் நீ முதல் வாரத்திலேயே வெளியே போறேன் என்று அவ்வளவு அழுது கொண்டு இருந்த அதெல்லாம் மறந்து போச்சா? என்று மாயாவை அவமானப்படுத்த, மாயா பதில் பேச முடியாமல் திணறுகிறார். இந்த நிலையில் இப்போதைக்கு பிக் பாஸ் வினுஷாவை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் இருக்க அனுப்பி வைத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+