நான் திருநெல்வேலி பொண்ணுதான்.. அதனால் மீடியாவில் பட்ட கஷ்டம்.. நடுரோட்டில் அழுதேன்! தீபிகா எமோஷனல்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த நடிகை விஜே தீபிகா சில மாதங்கள் கழித்து பிரபல சேனல் ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி தான் என்றும் சென்னைக்கு வந்த பிறகு தன்னுடைய பேச்சு வழக்கு மற்றும் உருவத்தை வைத்து சந்தித்த அவமானங்கள் குறித்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
பொதுவாக சினிமாவாக இருந்தாலும் சரி சீரியல்களாக இருந்தாலும் சரி என்னதான் திறமை இருந்தாலும் ஒரு சிலர் ஆரம்பகாலகட்டத்தில் அதிகமான அவமானங்களை சந்திக்கிறார்கள். அதிலும் வெளிமாநில நடிகைகள், நடிகர்களுக்குத்தான் தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு சில தமிழ் நடிகைகள் மட்டும்தான் பெரிய லெவலில் ஜெயித்திருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான அவமானங்களையும் கஷ்டங்களையும் பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை விஜே தீபிகா. இவர் ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இவர்களுடைய நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்தான். ஆனாலும் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட தீபிகாவின் முகத்தில் அதிகமான முகப்பரு இருக்கிறது என்று சொல்லி சேனல் தரப்பிலிருந்து அவரை சீரியலில் இருந்து விலக்கி இருந்தனர்.
பிறகு அதே ஐஸ்வர்யா கேரக்டரில் இன்னொரு நடிகை நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் சீரியலை விட்டு விலகியதும் அந்த நேரத்தில் மீண்டும் முகப்பருவை குறைத்த பிறகு விஜே தீபிகா அதே ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் நான் மீடியாவிற்கு வந்தபோது அதிகமான கஷ்டங்களை அனுபவித்தேன்.
என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி தான். திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான் என்னுடைய குடும்பம் இருந்தது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்கே என்பதால் எனக்கு திருநெல்வேலி பாஷை தான் நன்றாக வரும். "அவிய.. வந்தாவ... போனாவ" போன்ற வார்த்தைகள் தான் நான் அதிகமாக பயன்படுத்துவேன். ஆனால் இப்படி பேசினால் சினிமா துறையில் சரியாக இருக்காது என்று சொல்லி என்னை சிலர் ரிஜெக்ட் செய்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு நான் என்னுடைய பாஷையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினேன். அதற்குப் பிறகு எனக்கு உடனே சீரியல் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. சென்னையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரமதி என்ற சீரியலில் சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டும்தான் ஷூட்டிங் இருந்ததால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும் சாப்பாடு இல்லாமலும் பல நாட்கள் பட்டினியாக இருந்திருக்கிறேன்.
அதுபோல கொரோனா காலகட்டத்தில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது லாக்டவுன் போடப்பட்ட போது ஊருக்கு போனால் நம்முடைய கேரக்டர் மாற்றி விடுவார்கள் என்று நினைத்து ஊருக்கு போகாமல் சென்னையிலேயே இருந்துவிட்டேன். அந்த நேரத்தில் சாப்பிட எதுவும் இல்லை. கையிலும் பணம் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நின்று அழுது கொண்டிருந்தேன். அந்த நாட்கள் எல்லாம் இப்போதும் மறக்க முடியாது என்று அந்த பேட்டியில் விஜே தீபிகா பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications