விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த போது நடந்த சம்பவம்! யாரும் இப்படி பண்ண கூடாது! சீரியல் நடிகை ஓபன்
சென்னை: சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கி, பின்னர் சீரியல் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை யமுனா சின்னத்துரை தற்போது அளித்துள்ள ஒரு பேட்டி சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்த நினைவுகள் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்படுகிறது.

சீரியல் பிரபலம்
யமுனா தனது கேரியரை ஆரம்பித்த காலத்தை பற்றி பேசும்போது, ஆரம்பத்தில் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை, சில படங்களில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால் தான் அவர் சீரியல் துறைக்கு மாறினாராம். அங்கு தான் அவருக்கு உண்மையான அடையாளம் கிடைத்தது. பல சீரியல்களில் நடித்ததன் மூலம் குடும்ப ரசிகர்களிடம் பரிச்சயமான முகமாக மாறினார்.
சீரியல் நடிகை பேட்டி
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் அவர் கூறிய முக்கியமான விஷயம், தனது ஆரம்பகால அனுபவத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்த சம்பவத்தை பற்றி பேசி இருக்கிறார். ஒரு ஷார்ட் பிலிமில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்ததாக யமுனா கூறினார். அப்போது விஜய் சேதுபதி பெரிய நடிகராக உருவாகாத காலம்.
அந்த அனுபவத்தை பற்றி அவர் சொல்வதாவது, "விஜய் சேதுபதி அப்போது சில காட்சிகளை இப்படி எடுக்கலாம், அப்படி நடிக்கலாம் என்று பல ஐடியாக்கள் சொல்லுவார். ஆனால் எனக்கு அப்போது அவர் பற்றிய புரிதல் இல்லாததால், 'ஏன் இவ்வளவு ஓவரா பேசுறாரு' என்று நினைத்தேன். அவருடைய திறமை என்ன என்று புரியாமல் தவறாக நினைத்துவிட்டேன்."

தவறான புரிதல்
பின்னர் காலம் கடந்தபோது, அதே விஜய் சேதுபதி இன்று இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்ததை பார்த்தபோது தான் தனது தவறை உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.
"யாரையும் பார்த்ததும் உடனே தீர்ப்பு சொல்லக்கூடாது. ஒருவரின் திறமை என்ன என்பது நமக்கு உடனே தெரியாது. அப்போது நான் அவ்வளவு கவனிக்கவில்லை, அது என்னுடைய தவறு தான்," என்று ஓபனாக பகிர்ந்துள்ளார்.
இந்த பேட்டி வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, விஜய் சேதுபதியின் வளர்ச்சி பாதையை எடுத்துக்காட்டாக கூறி, "திறமை இருந்தால் ஒருநாள் கண்டிப்பாக வெளிப்படும்" என்ற கருத்தும் பரவி வருகிறது.
யாரடி நீ மோகினி சீரியல் நடிகை
மொத்தத்தில், யமுனா சின்னத்துரை பகிர்ந்த இந்த அனுபவம் ஒரு சாதாரண நினைவாக இல்லாமல், ஒருவரை வெளிப்படையாக மதிப்பீடு செய்யும் முன் யோசிக்க வேண்டும் என்ற ஒரு முக்கியமான பாடமாக மாறியுள்ளது. யமுனா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications