'அந்த’ கேள்வியை யாஷிகாவிடம் கேட்ட ரசிகர்...வித்தியாசமாக விளக்கம் கொடுத்த யாஷிகா
சென்னை: சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த்திடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி பலருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகருக்கு யாஷிகா கொடுத்த பதில் வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
மாடல் அழகியாகவும், நடிகையாகவும் இருக்கும் யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமாகி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைந்து பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் யாஷிகாவும் ஒருவர். பிக்பாஸ் இரண்டாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் செல்லும் இடங்களில் எல்லாம் இவர் பிக் பாஸ் யாஷிகா என்று அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.

எதிர்பார்க்காத விபத்து
யாஷிகாவிற்கு சமீபத்தில்தான் பெரிய அளவில் ஆக்சிடென்ட் நடந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடங்கி இருக்கும் யாஷிகா ஆனந்த் சமூகவலைதளத்தில் தன்னுடைய இன்ப, துன்பங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். ஏற்கனவே இவர் எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபராக தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் ரசிகர்களோடு சகஜமாகப் பழகத் தொடங்கி இருக்கிறார். இவர் மருத்துவமனையில் இருக்கும்போது கூட இவருக்கு பல நெகட்டிவ் கமெண்டுகள் வந்தது. அதையும் அந்த இக்கட்டான சூழ்நிலையில் சந்தித்து கொண்டு வந்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
தற்போது உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படுவதை தொடர்ந்து இவர் மீண்டும் போட்டோசூட் எடுக்கவும் தன்னுடைய வழக்கமான பணிகளையும் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் இவர் லேட்டஸ்ட்டாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளவில்லை. தற்போது சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் தன்னிடம் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு பதில் அளித்து வருகிறார்.

எதிர்பார்க்காத பதில்
யாஷிகா ஆனந்த் தன்னிடம் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு பதிலளித்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஒரு நெட்டிசன் இவருடன் நீங்கள் 'வெர்ஜினா' என்று கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு யாஷிகா 'இல்லை நான் யாஷிகா' என்று பதில் கூறியிருக்கிறார். இந்த பதிலை எதிர்பார்க்காத ரசிகர்கள் இது வேற லெவல் கலாய், சமூக வலைத்தளத்தில் ஒருசிலர் பிரபலங்களை அசிங்கமான கேள்விகளால் கேட்டுவிட்டால் தான் ஒரு பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இப்படி ஒரு அதில் தான் தரமான சம்பவம் என்று யாஷிகாவுக்கு அவருடைய தீவிரமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications