பிரியங்காவிற்காக பாவனி போட்ட பதிவு.. அதுவும் அந்த வார்த்தை ஹைலைட்.. விஷயமே இதுதானா? அப்போ மணிமேகலை?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று அவர் குற்றம் சாட்டி இருந்த நிலையில், பிரியங்காவிற்கு ஆதரவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய தோழியான பாவனி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
கடந்த வார சனிக்கிழமை தொகுப்பாளர் மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் தான் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறேன் அதற்கு காரணம் என்னை அந்த நிகழ்ச்சியில் வேலை செய்ய விடாமல் தொகுப்பாளராக வந்த ஒரு போட்டியாளர் தடுக்கிறார் என்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாள் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து ஒரு வீடியோ ஒன்றையும் தன்னுடைய youtube சேனலில் வெளியிட்டிருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்ப வரைக்கும் இது குறித்த விவாதங்கள் இணையத்தில் காரசாரமாக இருக்கிறது. மணிமேகலைக்கு சப்போர்ட்டாக அதிகமான ரசிகர்கள் பிரியங்காவை திட்டி தீர்த்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பிரியங்காவிற்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து பிரியங்கா இன்னும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. சேனல் தரப்பில் இருந்தும் இதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருக்கிறார்கள். இது மேலும் மணிமேகலையின் ரசிகர்களை மேலும் பேச வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக மணிமேகலைக்கு அதிக சப்போர்ட் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இன்று நடிகை பாவனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்காவிற்கு ஆதரவாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

அதில் "insecurity not dominance truth will prevail #standwithPriyanka" அதாவது "பாதுகாப்பு என்பது டாமினேஷன் கிடையாது.. உண்மை சீக்கிரம் வெளிப்படும்" என்று பாவனி தெரிவித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் காதலர்களாக சுற்றி கொண்டு இருந்தாலும் வெளியே வந்த பிறகு காதலை மறந்து டாட்டா காட்டி பிரிந்து போவதை பார்த்து இருப்போம். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனித்தனியாக வந்த பாவனி மற்றும் அமீர் பிரியங்காவால் தான் காதலிக்க தொடங்கி இருந்தனர்.
ஆரம்பத்தில் தோழியாக இருந்த பிரியங்கா அமீர் வந்ததும் அமீரிடம் நட்பாக பழகி இருவருக்கும் இடையே பாலமாக இருந்து அவர்களுடைய காதலை வளர்த்து விட்டார். இப்போ வரைக்கும் பாவனி மற்றும் அமீர் தங்களுடைய காதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக பிரியங்கா இருக்கும் நிலையில் பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக இப்போது பாவனி தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான விமர்சிக்கப்படுகிறது.
ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவின் தம்பி என்று பாசமழையை பொழிந்த இர்ஃபான், ராமர், அக்ஷிதா உட்பட எந்த போட்டியாளர்களும் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பாடகி பூஜா மட்டும் நேற்று இரவு பிரியங்காவிற்காக ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications