Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கால் அழகி" நடிகை யார்? கிராம நடிகர்? அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை.. புவனேஸ்வரிக்கு ஒரே நாளில் 18 சீரியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் பல்வேறு காரணங்களால் ஷூட்டிங்குகள் திடீர் திடீரென நின்றுபோவதுண்டு.. டைரக்டர்கள் திறமையாக இருந்தாலும், சிலசமயம், ஹீரோ, ஹீரோயின்களாலும் ஷூட்டிங் பாதிக்கப்படுவதுண்டு.. அட்ஜெஸ்ட்மென்ட் என்ற விஷயத்தினாலும் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதுண்டு என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த சபிதா ஜோசப் பேட்டி" சினிமா துறையிலும் அட்ஜெட்ஸ்ட்மென்ட் உள்ளது என்றாலும், எல்லாருமே அதுபோல் கிடையாது. அட்ஜெஸ்ட்மென்ட் கேட்ட நடிகர்கள் சிலர், இப்போது ரிடையர் ஆகிவிட்டார்கள்..

Television Bhuvaneswari Village Famous Actor

குறிப்பாக 80, 90களில் 2 ஹீரோக்கள் பீக்கில் இருந்தபோது, அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக் கொள்ளும் நடிகைகளை, தங்களுக்குள் பரிமாறி கொள்வார்கள்.. இதனால் படங்களில் அந்த நடிகைகளுக்கு தொடர்ந்து சான்ஸ் கிடைக்கும்... நான் சொல்லும் இந்த 2 பேரில் ஒருவர், இப்போதெல்லாம் நடிப்பது கிடையாது. மற்றொருவர் தெலுங்கில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்..

கிராமிய மணம் நடிகர்

அதேபோல, இன்னொரு ஹீரோ, தான் நடித்த படங்களால் கிராமங்களில் அதிகமாக பேசப்பட்டவர்.. தன்னுடைய ஹிட் பாடல்களாலும் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டவர்.. தன்னுடைய ஒரு படத்தில் ஒல்லிக்குச்சி ஹீரோயினை நடிக்க வைக்க பிடிவாதம் பிடித்தார். கடைசியில் அந்த ஒல்லிக்குச்சி நடிகையாலேயே படம் தோல்வியை தழுவியது.

ஆனால், இப்போது சினிமாவில் நிலைமை மாறிவிட்டது. நடிகர், நடிகைகள் தெளிவாகவே இருக்கிறார்கள்.. அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.. படித்த புத்திசாலிகளாகவும் உள்ளதால், நல்லது கெட்டது அறிந்துள்ளனர்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்

இந்நிலையில Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் பெரிய ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட நடிகைகளே ஒன்றாக சேர்ந்து நடிப்பார்கள்.. 10 படம், 20 படங்கள் கூட இந்த ஜோடி இணைந்து நடிப்பார்கள்... ரசிகர்களிடம் இந்த ஜோடி பிரபலமாவதுடன், படங்களும் வெற்றி பெறும்.
பிறகு சம்பந்தப்பட்ட நடிகர்களின் வேறு மொழி நண்பர்களும், அதே நடிகையுடன் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.. அதாவது ஏற்கனவே நடிகை பிரபலமாகியிருப்பதால், படத்துக்கும், அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும்கூட பயன்படுத்துவார்கள்.

தெலுங்கில் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார், "கால் அழகி" என்று சொல்லப்படும் நடிகையுடன் 16 நாள் அவுட்டோரில் ஜாலியாக இருந்து விட்டு வந்தார்.. அதே நடிகர் இன்னொரு நடிகையையும் அழைத்து சென்றது, அப்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பூனைக்கண் புவனேஸ்வரி

அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதில் என்ன தவறு இருக்கு? என்று பூனைக்கண் புவனேஸ்வரி நான் பேட்டி எடுக்கும்போது ஒரு முறை சொன்னார். இதையே தலைப்பு செய்தியாக நான் எழுத, அவங்களுக்கு 19 சீரியல்கள் ஓவர்நைட்டில் புக்காயின.. இப்போது புவனேஸ்வரி சாமியாரா போயிட்டாங்க.

எப்போதுமே ஷூட்டிங் அதிக நாட்கள் எடுக்கிறார்கள் என்றால் செலவுகளும் அதிகமாகும்.. கேஎஸ் ரவிக்குமாரை அனைவருக்கும் பிடிக்க காரணம், 95 லட்ச ரூபாயில், 45 நாளில் படம் எடுத்து முடிப்பதாக சொல்வார்.. ஆனால், 90 லட்ச ரூபாயில் 40 நாட்களிலேயே எடுத்து முடித்துவிடுவார்..

மீனா & ரோஜா ஷூட்டிங்

இதுபோன்ற திறமை பலரிடம் காணப்படுவதில்லை.. அப்படியே டைரக்டர்கள் திறமையாக இருந்தாலும், சிலசமயம், ஹீரோ, ஹீரோயின்களால் ஷூட்டிங் பாதிக்கப்படுவதுண்டு.. இப்படித்தான் ஒரு படத்தில் மீனா, ரோஜா என 2 ஹீரோயின்கள் அவுட்டோரில் நடித்தார்கள்.. அப்போது ரோஜாவை விட்டுவிட்டு, மீனாவை மட்டுமே வைத்து நிறைய சீன்களை எடுத்து கொண்டிருந்தார்கள்..

இதைப்பார்த்து கோபப்பட்ட ரோஜா, "அவங்களை மட்டும் வைத்து சீன் எடுத்துக்கறதுக்கு நான் எதுக்கு இந்த படத்தில்?" என்று ஷூட்டிங்கிலிருந்து கோபித்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.. அவுட்டோர் ஷூட்டிங் என்றாலே அதிகமாக செலவாகும். இதுல ரோஜா கோபித்து கொண்டதால், பிறகு அவரை சமாதானம் செய்து, 3 நாள் இடைவெளியாகிவிட்டு, பிறகு மறுபடியும் அவரை வைத்து ஷூட்டிங் நடத்தப்பட்டது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+