2 பொண்ணுங்க பக்கத்துல இருக்கும் போது அந்த நடிகர்! இப்படியா பண்ணுவாங்க? ரம்பா, ஸ்ரீதேவி வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நடிகை ரம்பா மற்றும் ஸ்ரீதேவி அங்கு சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதோடு இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சாண்டி மாஸ்டர் செய்த செயல் குறித்தும் அந்த வீடியோவில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் புதியது புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கிவிட்டால் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கி விடுகிறார்கள். அந்த வரிசையில் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியும் இப்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், ரம்பா, சாண்டி மாஸ்டர் என மூன்று பேரும் நடுவர்களாக இருக்கிறார்கள். முதல் சீசனில் நடிகை சங்கீதா நடுவராக இருந்தார். ஆனால் அவர் இரண்டாவது சீசனில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக தான் ரம்பா இந்த நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருக்கிறார்.
ஃபேவரைட் நடிகை
ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களுக்கு பேவரைட் நடிகை ஆன ரம்பா சில வருடங்களாக எந்த திரைப்படங்களிலும் தலை காட்டாமல் இருந்தார். இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அன்பு கட்டளை போட்டு வந்தனர். ஆனால் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படத்தில் தான் நான் நடிப்பேன், இப்போது உள்ள திரைப்படங்களில் அதிகமாக கதாநாயகன்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் இருக்கிறது அதனால் எனக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க பிடிக்கவில்லை என்று சொல்லி இருந்தார்.
ரம்பா கொடுத்த விளக்கம்
அதுபோல தன்னுடைய கணவரின் பிசினஸுக்கு பார்ட்னர் ஆக அவருடைய ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பலர் பார்த்து வருவதாக கமெண்ட்களில் கவிதைகளை கொட்டி வருகிறார்கள்.

நாட்டுப்புற பாடல்கள்
அதுபோல இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற ரவுண்டு நடைபெற இருக்கிறது. அதற்காக ஸ்ரீதேவி மணப்பெண் போல பட்டு புடவை, தலை நிறைய மல்லிகை பூ வைத்து கலக்கலாக வந்திருக்கிறார். அதுபோல ரம்பா மார்டன் உடையில் வந்து இருக்கிறார். சாண்டி மாஸ்டர் கோட் சூட்டில் குகு ஜிகுவென ஜொலிக்கிறார். இந்த இந்த வார சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.
தூங்கிய சாண்டி மாஸ்டர்
இந்த நிலையில் நடிகை ரம்பா மற்றும் ஸ்ரீதேவி இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாண்டி மாஸ்டர் தூங்குவதை இவர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவில் சாண்டி மாஸ்டரை டேக் செய்து "மூன்று நாளா பகல் இரவு படப்பிடிப்பில் சாண்டி மாஸ்டர் இருந்திருக்கிறார். அதனால இங்க இவ்வளவு சத்தம் போடுறாங்க அந்த சத்தத்துக்கு நடுவுலயும் இவனால் மட்டும் எப்படி இவ்வளவு நிம்மதியாக தூங்க முடியுது?"

ரம்பா வெளியிட்ட வீடியோ
இந்த செட்டில் எல்லாரும் சின்சியரா வேலை பார்த்துட்டு இருக்காங்க இந்த இடத்துல எந்த கவலையும் இல்லாம சாண்டி மட்டும் தூங்கிக்கிட்டு இருக்கிறார். நாங்க பக்கத்துல இரண்டு பொண்ணுங்க பாவமா உட்கார்ந்து இருக்கிறோம் ஆனா இவரு மட்டும் ஜாலியா தூங்கிகிட்டு இருக்காரு என்று சாண்டி மாஸ்டருக்கு தெரியாமல் அந்த வீடியோவை எடுத்து அதை சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் ஸ்ரீதேவி விஜயகுமார்
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதிலும் நடிகர் தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதுபோல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது குடும்பத்தினர் பார்த்து பேசி முடித்த ராகுல் என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் சேட்டில் ஆகிவிட்டார்.
சாண்டியின் கமாண்ட்க்காக வெயிட்டிங்
திருமணத்திற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி மற்றும் தொகுப்பாளராக இருக்கும் நடிகர் ரியோ இருவருடைய ஜாலியான கலாய்ப்பு நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. இப்போது சாண்டி மாஸ்டரை கலாய்த்து இவர்கள் வீடியோ வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த வீடியோவிற்கு சாண்டி மாஸ்டர் என்ன கமெண்ட் கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் காத்திருப்பதாக கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ்: நல்லது செய்ய போன மீனாவை மாட்டிவிட்ட பாக்கியம்! கோபத்தில் கோமதி சொன்ன வார்த்தை! செம சம்பவம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications