Adhi Parvathi: அவர் கேக் வெட்ட.. இவர் ஊட்டி விட.. செம்பருத்தி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை: ஷூட்டிங் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது.. டிவி சீரியல் வட்டாரங்கள் கலகலக்க ஆரம்பித்துள்ளன. செம்பருத்தி வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேறு நடந்துள்ளது.
கொரானா வந்து உலகமே கதிகலங்கி இருக்கும் இந்த நேரத்துல மக்கள் இந்த நோயோட வாழ பழகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தான் இருக்கிறது இப்ப நடக்கிற நிகழ்வுகளை பார்க்கும்போது.
ஒருபுறம் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து போனாலும் மறுபுறம் இதையும் பழகிக் கொண்டார்கள் மக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் ஒவ்வொரு கஷ்டங்களையும் கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் இந்த காலகட்டத்தையும் எளிதில் கடந்து வெற்றி அடைந்து விடலாம் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

மீண்டும் ஷூட்டிங்
இவ்வளவு நாளா லாக்டோன் போட்டு சின்னத்திரை நடிகர்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்து வீட்டில் இருந்தன.ர் ஆனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்திருக்கிறது. இது சின்னத்திரை நடிகர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டம்தான்.

செம்பருத்தி ஷூட்டிங்
அந்தவகையில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. முதல் நாளிலேயே பிறந்த நாள் ஒன்றை கொண்டாடியுள்ளனர். யாருக்கு என்றால் டைரக்டர் ரவி பாண்டியனுக்குத்தான். செட்டிலேயே கேக் வெட்டி ஊட்டி ஜாலியாக கொண்டாடியுள்ளனர். .இந்த சீரியலில் காட்டப்படும் பிரம்மாண்ட வீட்டில் வைத்துதான் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

இயக்குநருக்கு பிறந்த நாள்
படப்பிடிப்பு தொடங்கியதும் முதல் வேலையாக கேக் கட்டிங் நடந்திருக்கிறது. டைரக்டர் ரவி பாண்டியன் கேக் கட்டி எல்லோருக்கும் ஊட்டி விட்டார். சிலர் முகக் கவசம் அணிந்து கொண்டே வாங்கிச் சென்றது காமெடியாகஇருந்தது. எல்லோரும் முகத்தில் மாஸ்க் போட்டு செம ஹாப்பியா என்ஜாய் பண்ணிருக்காங்க. படப்பிடிப்பும் படு பாதுகாப்பாகவே நடக்கிறதாம். எல்லா முன்னெச்சரிக்கையும் செய்திருக்காங்களாம்.

பார்வதியுடன் ஆதி
நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் கலந்துகொண்டு என்ஜாய் பண்ணிருக்காங்க. செம்பருத்தி சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல் ஆகும். இதில் ஆதிக்கும் பார்வதிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஆதியாக கார்த்திக், பார்வதியாக ஷபானா நடித்திருக்கிறார்கள். ஆதியின் அம்மா கேரக்டரில் பிரியா ராமனும் நடித்திருக்கிறார்கள்.

பிரியா ராமன்
பிரியா ராமன் வள்ளி படத்தில் அறிமுகமானாலும் சூரிய வம்சம் படத்தில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ சாங் செம மூலமாக ஹிட்டானாங்க. அவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இப்ப இருக்கிற கதாநாயகிகளுக்கு அழகில் டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். செம்பருத்தி சீரியலில் இவரின் நடிப்பு வேற லெவல் இருக்கிறது.

மீண்டு வரும் விருந்து
இந்த சீரியலை கொஞ்ச நாளா பாக்காம ரசிகர்கள் ரொம்ப தான் போய் சோர்ந்து போயிருந்தாங்க. இதில் ஆதி பார்வதியின் காதல் கல்யாண வாழ்க்கை ரசிகர்களுக்கு விருந்து தானாம். அதில் வரும் சில லவ் சாங் கூட எல்லாரும் ஸ்டேட்டஸ் சாங்கா வைத்து கொண்டு இருக்காங்க. செம்பருத்தி சீரியல் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் இரவு 9 மணி சீரியல் ஆக செம்பருத்தி ஒளிபரப்பாக தொடங்கிவிடும்.

அதே ஆதரவுதான்
இதில் ஆதியாக நடிக்கும் கார்த்திக்குக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பெண்களின் கனவு நாயகனாக வலம் கொண்டு வந்திருக்கிறார். காரணம் அவர் வைத்துள்ள தாடி மட்டுமல்ல.. இந்த சீரியலில் உள்ள அவரது கேரக்டரும்தான். இதனால் இந்த சீரியலுக்கு இன்னும் பழைய மாதிரியே ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்றுதான் சொல்லப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications