இந்தப் புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான்? அசீம்,தனாவை மறைமுகமாக கலாய்த்த போட்டியாளர்!?
இந்த பிக் பாஸ் புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான். அதனால் பேட்டியில் மற்றவர்களை தரம் தாழ்த்த வேண்டாம் என்று ஏடிகே பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு ஏடிகே சக போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே அசீம் மற்றும் தனா இருவரும் பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி குறை கூறி வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து ஏடிகே இந்த பதிவு வெளியிட்டிருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
யாருக்காக பதிவு வெளியிடுகிறார் என்பதை கூறாமல் மறைமுகமாக ஏடிகே கருத்து கூறியிருக்கிறார்.

முடிவடையாத பிரச்சனை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 முடிவடைந்த பிறகும் ஒரு சில போட்டியாளர்கள் மாறி மாறி பேட்டி கொடுத்து தங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை சமூக வலைத்தளத்தில் கொட்டி வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டும் தான் இவர்களுக்கு சண்டை என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஐயோ போதுமடா சாமி என்று இணையத்தையே கட் செய்யும் அளவிற்கு சமூக வலைதளத்தில் இந்த சீசன் போட்டியாளர்களின் சண்டை முடிவடையாமல் இருக்கிறது.

முடிவடையாத கருத்து மோதல்கள்
விக்ரமன், அசீமிற்க்கு டைட்டில் கொடுத்தது தவறான உதாரணமாக மாறி விட கூடாது என்று நான் நினைத்தேன். அதனால் தான் அசீமிற்கு டைட்டில் கிடைக்கக் கூடாது என்று கூறினேன் என்று தன்னுடைய கருத்தை கூற, அதற்கு அசீம் நான் அப்படி என்ன தவறாக செய்து விட்டேன் என்று கேள்வி எழுப்ப, அதற்கு விக்ரமன் ரசிகர்கள் அவர் பெண்களிடம் தவறாக வார்த்தைகளை பயன்படுத்தினால் தரகுறைவாக பேசினார் என்று எல்லாம் கூற, சமூக வலைத்தளத்தில் விக்ரமன் மற்றும் அசீம் ரசிகர்கள் இடையே கருத்து மோதல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.

தனலட்சுமி கேள்வி
இந்த நிலையில் விக்ரமன் அசீமிற்க்கு ஆதரவாக தனலட்சுமி எப்படி அப்யூஸர் என்றால் என்னவென்று விளக்கம் கேட்டு, வீடியோ வெளியிட்டு அசீம் அப்யூஸர் என்றால் விக்ரமனும் அப்படித்தான் என்னிடம் அப்படித்தான் நடந்து கொண்டார். ஏடிகே என்னுடைய ஆடையை கிழித்த போது கூட அவரோடு பக்கத்தில் தானே விக்ரமன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய நியாயம் எல்லாம் எங்கே போனது என்று பல்வேறு கேள்வி எழுப்ப, தற்போது சமூக வலைத்தளம் திறந்ததும் இவர்களுடைய வீடியோக்கள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஏடிகே அறிவுரை
இந்த நிலையில் இதுவரைக்கும் ஏடிகே விக்கிரமனோடும், அசீமோடும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருவரும் என்னுடைய நண்பர்கள் தான் அசீம் கோபப்படுவார் ஆனால் நல்லவன் என்று சர்டிபிகேட் கொடுத்திருந்தார்.விக்ரமன் ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன் என்றும் தன்னுடைய கருத்தை கூறி இருந்தார். இந்த நிலையில் தனலட்சுமி வெளியிட்ட வீடியோவை பார்த்து தற்போது தன்னுடைய twitter பக்கத்தில், இந்த பிக் பாஸ் புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான் அதனால் பேட்டிகளில் மற்றவர்களை தரம் தாழ்த்த வேண்டாம். சக போட்டியாளர்களை பற்றி வன்மத்தை கக்குவதை விட்டுவிட்டு தங்கள் அடுத்த வேலைக்கான மீடியாவை பயன்படுத்துங்கள். இந்த ஷோ முடிந்துவிட்டது நிஜ வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications