பல வருடங்களுக்கு பிறகு இணையத்தில் கவனம் ஈர்க்கும் நடிகை நீனா.. இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90களில் பிரபலமான நடிகை நீனாவில் சமீபத்திய சோசியல் மீடியா போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாயகன், கேளடி கண்மணி, விடுகதை, கண்ணாத்தா, சித்தி உள்ளிட்டா படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த நீனா தற்போது எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பல நடிகர், நடிகைகள் இன்று திரை துறையை விட்டு விலகி தங்களது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை நீனாவும் ஒருவர். தற்போது நீனா சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உளள சில புகைப்படங்கள் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். குறிப்பாக சக நடிகர் மற்றும் நண்பர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

Neena Pillai Neena Actress

கமல்ஹாசனின் மகள்

1981 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நீனா சிறு வயதிலேயே நடிக்க தொடங்கி இருந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருந்தார். கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் அவருக்கு மகளாக நடித்தது அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது நாயகன் படம் தனக்கு முதல் படம் கிடையாது என்றும் அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக நடிங்க தொடங்கி விட்டேன், 2 வயதில் இருந்தே நான் நடிப்பு பயணத்தை தொடங்கி இருந்தேன் என்று கூறியிருந்தார்.

விடுகதை படத்தில் அறிமுகம்

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் அகத்தியன் இயக்கத்தில் கே. பாலச்சந்தர் தயாரித்த விடுகதை திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்தது அவருடைய திரை பயணத்தில் முக்கியமான படமாக அமைந்திருந்தது. 1997 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் நீனா நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ராசி, காலமெல்லாம் காத்திருப்பேன், கண்ணாத்தாள், நாகலிங்கம், சுதந்திரம், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Neena Pillai Neena Actress

நடிகை நீனா நடித்த சீரியல்கள்

கண்ணாத்தாள் திரைப்படத்தில் சாமி கேரக்டரில் அவர் நடித்தது பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அதிகமாக நடித்திருந்தார். சித்தி சீரியல் அவருக்கு சின்னத்திரை வட்டாரத்தில் நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து அண்ணாமலை, வரம், பெண், ஜெயிப்பது நிஜம், இப்படிக்கு தென்றல் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார்.

நடிகை நீனா தற்போதைய நிலை

ஒரு கட்டத்தில் சினிமாவை விட சின்னத்திறையில் தொடர்ந்து நடித்து வந்த அவர் பிறகு 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகத் தொடங்கி விட்டார். திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் தன்னுடைய குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் அங்கு ஆசிரியராக பணியாற்றி வருவதாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். கணவர் மற்றும் குழந்தைகளுடன் மெல்போர்னில் வசித்து வருகிறார்.

Neena Pillai Neena Actress

ஆனால் அவருடைய கணவர் நீ மீண்டும் நடிக்க வேண்டும் என்று விரும்பினாலும் தனக்கு தன்னுடைய குடும்ப வாழ்க்கையும், தற்போதைய பணியும் மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக பேசி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் இத்தனை வருடம் கழித்தும் இவர் பழைய நிலையில் அப்படியே இருக்கிறாரே என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+