“தன்மானம்”.. CWCயில் மணிமேகலை சொன்ன குற்றச்சாட்டு.. பிரியங்கா முதல் முறை வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை பிரியங்கா மீது பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். இந்த நிலையில் இதற்கு இதுவரைக்கும் விளக்கம் கொடுக்காமல் இருந்த பிரியங்கா முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்று பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக சின்னத்திரை ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் பேசிக்கொண்டிருந்த விஷயம் என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றியதுதான். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை தான் விலகப் போறேன் என்று ஒரு போஸ்ட்டை தட்டி விட்டிருந்தார். அதுதான் இணையத்தில் பெரும் தீயாக பரவி வந்தது.

தான் விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று அவர் பெயரை சொல்லாமலேயே குறிப்பிட்டு இருந்தார். அதோடு நான் வாங்கும் சம்பளத்துக்கு 100% வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய வேலையை செய்ய விடாமல் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் தடுக்கிறார். அவரை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்தான் இந்த சேனலில் பெரியவர் என்பது போன்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
அவரிடம் என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். எனக்கு தன்மானம் இருக்கிறது அதனால் நான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்து விட்டேன் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ரசிகர்கள் மணிமேகலைக்கு ஆதரவாக பிரியங்காவை திட்டி வந்தனர். முதல் சில நாட்கள் அமைதியாக இருந்த விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக பிறகு வீடியோ போட தொடங்கி விட்டார்கள்.
அதோடு இணையத்திலும் இதுகுறித்து பல வீடியோக்கள், மீம்ஸ்கள் பரவி வந்தது. அதிலும் பலர் பிரியங்காவின் வேலையை மட்டுமல்லாமல் அவருடைய பர்சனல் வாழ்க்கை குறித்தும் பேசி வந்தனர். அப்போது இரண்டாவது வாரமே அடுத்த வீடியோ வெளியிட்ட மணிமேகலை பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கையைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று குறிப்பிட்டு பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்தவர்களை சொம்பு என்று கிண்டல் சேர்ந்திருந்தார்.
அதற்கு விஜய் டிவி மாகாபா, குரேஷி உட்பட பலர் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலாக கொடுத்து வந்தனர். இந்த பிரச்சனைகளுக்கு இடையே பிரியங்கா எந்த ஒரு பதிவோ விளக்கமோ கொடுக்காமல் அமைதியாக இருந்தார். இந்த நிலையில் பிரியங்கா இதுபற்றி என்ன செல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் நேற்று இரவு தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் "back to the grind" என்ற கேப்ஷனோடு கடற்கரையில் அவர் ஜாலியாக அலைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். எத்தனை பிரச்சனைகள் எனக்கு வந்தாலும் அதில் நான் கூலாக இருப்பேன் என்று இவர் சொல்லாமல் சொல்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications