ரஜினிகாந்த் கூலி பேச்சையே ஓவர்டேக் செய்துட்டாரே கமல்.. வியந்து நின்ற அகரம் அரங்கம்.. சபாஷ் சூர்யா
சென்னை: ரஜினிகாந்த் கூலி படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்தபடி உள்ளது.. கலாநிதி, லோகேஷ் கனகராஜ், அனிருத் பாடல்கள் இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1000 கோடியை கூலி படம் வசூல் அள்ளும் என்கிறார்கள். எனினும், கூலி படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினி பேசியிருந்ததை, அகரம் அறக்கட்டளை விழாவில் கமல்ஹாசன் பேசியிருந்தது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. இதற்கு என்ன காரணம்?
கூலி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, "கூலி படம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் 2 மணி நேரம் பேட்டி கொடுத்தார். உட்கார்ந்து பார்த்தேன் முடியல, படுத்து பார்த்தேன் முடியல, தூங்கி எழுந்து பார்த்தேன் அப்பவும் முடியல..

எப்போதெல்லாம் இந்த ரஜினிகாந்த் என்கிற மரம் விழப் போகிறதோ, அப்போதெல்லாம் என் ரசிகர்கள் என்னைத் தூக்கி விடுகிறார்கள். நான் அவர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்.
வெற்றியின் பிரச்சனை
என் வெற்றிக்குப் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது, அது உழைப்புக்கு அப்பாற்பட்டது. அதுதான் கடவுளின் குரல். உங்கள் குரலையும் கடவுளின் குரலையும் மனதில் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும். அனிருத் பற்றி சொல்ல வார்த்தைகளே போதாது. அவன் தன் உச்சத்தில் இருக்கிறான். இந்தியாவின் முதல் ராக்ஸ்டார் அவன்தான். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியா முழுவதும் மிகவும் தகுதியான இளைஞன். அனி, கடவுள் ஆசிர்வாதம்" என்றெல்லாம் பேசியிருந்தார்.
ரஜினியின் பேச்சு
முன்னதாக, இந்த இசைவிழாவில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதுதான் பலரது ஆவலாக இருந்தது.. எதார்த்தமாகவும், ஜாலியாகவும் ரஜினி பேசியிருந்தாலும், கவர்ந்திழுக்ககூடிய பேச்சாக அமையவில்லை என்றும், சுளீரென எதையும் பேசவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.. கூலி படத்துக்கான விழா என்பதால், அது தொடர்பாகவே பேசியிருந்தபோதும், ரஜினியின் மற்ற படங்கள் அளவுக்கு சோஷியல் மீடியாவிலும் அவரது பேச்சு பெரிதாக பேசப்படவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், அகரம் விழாவில் கமல்ஹாசன் பேசியிருந்த வீடியோவையும், ரஜினிகாந்த் பேசியிருந்ததையும் சிலர் இணையத்தில் ஒப்பிட்டு வருகிறார்கள்.. அத்துடன், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரையும் தாண்டி, மாணவர்கள், பெற்றோர்களின் கவனத்தையும் கமல் பேச்சு சுண்டி இழுத்துள்ளதாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
நீட் தேர்வுக்கு எதிராக பேசியிருந்ததால், கமலின் பேச்சினை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.. நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா மற்றும் அறக்கட்டளையின் விதை திட்டத்தின் 15ம் ஆண்டு விழாவானது சென்னை சாய்ராம் கல்லூரியில் நேற்று நடந்தது.
கமல்ஹாசன் வியப்பு
அறக்கட்டளையின் பங்களிப்புடன் 51 மருத்துவர்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அவர்களில் குறிப்பிட்ட நபர்களை மேடையேற்றி பாராட்டும் தெரிவிக்கப்பட்டதை கமல் எதிர்பார்க்கவேயில்லை..
கமல்ஹாசன் பேசும்போது, "அகரம் அறக்கட்டளை பல மருத்துவர்களை உருவாக்கியிருக்கிறது.. 2017க்கு பிறகு இதனை செய்ய முடியவில்லை. நீட்டை ஏன் எதிர்க்கிறோம் என்று இப்போது புரியுதா?
2017லிருந்தே பல மாணவர்களின் கல்விக்கனவை இந்த சட்டம் கெடுத்துள்ளது. ஆனால், சட்டத்தையே மாற்றி எழுதக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது. சனாதன சங்கிலிகளை நொறுக்கக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. எனவே அந்த ஆயுதத்தை எல்லாரும் கையில் எடுக்க வேண்டும்.
என்ன வலிக்க போகிறது
சமீபத்தில் நான் முதல்வருடன் பேசிக்கொண்டிருந்தபோது அகரம் போன்ற தொண்டு நிறுவனங்களை அரசு ஆதரிக்க வேண்டும் என்றேன்.. அவர்கள் பணம் கேட்பதில்லை. அனுமதியைதான் கேட்கிறார்கள். அதனை செய்து கொடுப்பதில் என்ன வலிக்கப் போகிறது? நாங்கள் அதை செய்து கொண்டிருக்கிறோம். இனியும் செய்ய தான் போகிறோம்" என்றார் கமல்ஹாசன்..
அந்தவகையில் கமலின் பேச்சு அரசியலையும் தாண்டி மாணவர்களின் கவனத்தையும் சோஷியல் மீடியாவில் பெற்று வருகிறது. அத்துடன், கமல்ஹாசன் பேச்சுக்கு வடமாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.. இது விவாதங்களையும் ஏற்படுத்திவிட்டுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications