“பகலறியான்” திரைப்படத்தில் கதாநாயகியாகும் “ஆஹா கல்யாணம்” சீரியல் நடிகை.. ஜோடி யார் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "ஆஹா கல்யாணம்" சீரியலில் மகா கேரக்டரில் நடித்து வரும் "நடிகை அக்ஷயா" புதிய திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து இருக்கிறது.
அதோடு ஆரம்பத்தில் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்த பல நடிகைகள் அங்கு தங்களுக்கு மார்க்கெட் சரியா தொடங்கியதும் சின்ன திறையை நோக்கி காலடி எடுத்து வைக்க தொடங்குவார்கள். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் பல நடிகர்கள், நடிகைகள் சின்னத்திரையில் என்ட்ரி ஆகி அங்கு தங்களுக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து பிரபலமானதும் வெள்ளி திரைக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் வெற்றி பெற்றவர்கள் லிஸ்டில் பலரை சொல்லலாம். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் தொடங்கி பிரியா பவானி சங்கர், வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான ஆஹா கல்யாணம் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் அக்ஷயாவும் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அக்ஷயா ஆஹா கல்யாணம் சீரியலில் மகா கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியலில் தியாக சுடராக இருக்கும் இவருக்கு ஒரு பக்கம் பாசிட்டிவ் வந்தாலும் இன்னொரு பக்கம் நெகட்டிவ் வருகிறது. கதாநாயகி என்றால் தன்னுடைய தங்கை மற்றும் அம்மா என்ன தப்பு செய்தாலும் அதை வெளியே சொல்லாமல் மறைத்து இவரே எல்லாவற்றையும் சரி செய்கிறேன் என்கிற பெயரில் ஒவ்வொரு முறையும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பது ரசிகர்களின் அதிருப்தியாக இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இந்த கேரக்டரை ரசிக்கவும் செய்கிறார்கள்.

ஆனால் தனக்கு கொடுத்த கேரக்டரை கனகச்சிதமாக செய்து வரும் அக்ஷயா இப்போது இயக்குனர் பேரரசுவின் பகலறியான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் வெற்றி நடிக்கிறார். படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. அதில் தான் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை அக்ஷயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அது அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் என்று சீரியலில் அக்ஷயா மற்றும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த் இருவரும் கெஸ்ட் ஆக கலந்து கொண்ட போது அக்ஷயா திரைப்பட நாயகி போல இருக்கிறார். அவர் திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது. ஆனால் திரைப்படம் என்ன மாதிரி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications