ரீல்ஸ்ஸால் வந்த வினை.. பாகுபலி நடிகையிடம் 3 கோடி நஷ்ட ஈடு கேட்ட விமான நிறுவனம்! பின்னணி இதுதானா?
சென்னை: விமானத்தில் ஏறி ஒரு ரீல்ஸ் வீடியோ போட்டது தான் பாலிவுட் நடிகைக்கு நீதிமன்றம் வரை பிரச்சனை போய் இருக்கிறது. அதுவும் சாதாரண வழக்கு இல்ல 3 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு. அந்த நடிகை வேறு யாருமில்லை பாகுபலி படத்தில் டான்ஸ் ஆடிய நேரா பதேஷி தான். அவரிடம் டியூன்ஸ் ஏவியேசன் நிறுவனம் குஜராத் மாநிலம் காந்திநகர் நீதிமன்றத்தில் சிவில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
அதாவது நேரா தங்களுடைய விமானத்தை சமூக வலைத்தளத்தில் டாய் மினியேச்சர், லேகோ விமானம் என்று கிண்டலாக சொல்லி இருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவு தங்கள் நிறுவனத்தின் பெயரையும், வியாபாரத்தையும் பாதித்து விட்டது என்று நிறுவனம் குற்றம் சாட்டி இருக்கிறது. இந்த வழக்கு வரும் செப்டம்பர் 25 விசாரணைக்கு வருகிறது.

அப்படி என்ன வீடியோ போட்டார்
இந்த விவாகாரம் இப்போது வெடித்திருக்கிறது ஆனால் இந்த பிரச்சனை போன வருஷம் டிசம்பர் மாதத்திலேயே நடந்து விட்டது. கடந்த 2025 டிசம்பர் 14ஆம் நேராவும் அவருடைய குழுவினரும் மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு டியூன்ஸ் ஏவியேஷன் நிறுவனத்தின் Cessna Citation CJ2 சாப்டர் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். விமானத்திற்குள் இருந்தபடியே நேரா சில வீடியோக்களையும் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
வைரலான வீடியோ
அந்த வீடியோக்களில் அவர் இந்த விமானத்தை பார்ப்பதற்கு மினியேச்சர் மாதிரி இருக்கு டாய் லோகோ விமானம் என்று கிண்டல் செய்து இருக்கிறார். இதுதான் இப்போது அவருக்கு எதிராக பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது எங்க பிசினஸ் இவங்க பொம்மைன்னு சொல்லிட்டாங்களே என்று அந்த சம்பந்தப்பட்டவர்கள் கோபப்பட்டு விட்டார்கள். நேராவை இன்ஸ்டாகிராமில் 4.6 கோடிக்கு மேற்பட்டவர்கள் ஃபாலோ பண்ணுகிறார்கள். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒருவர் ஒரு விமானத்தைப் பற்றி பொம்மை பிளேன் என்று சொன்னால் அது சும்மா ஒரு ஒரு தனிப்பட்ட ஜோக் கிடையாது. அது ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களிடம் போய் சேரும் என்று விமான நிறுவனம் தனது வழக்கில் சொல்லி இருக்கிறது.

நிறுவனத்தின் குற்றச்சாட்டு
அதோடு தங்களுடைய விமான முன்பதிவுகள் 15 முதல் 20% வரை குறைந்ததாகவும், அதிகமானோர் டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டனர் என்றும் நிறுவனம் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த பாதிப்புக்கு 3 கோடி நஷ்ட ஈடு வேண்டும் என்பதுதான் டியூன்ஸ் ஏவியேஷன்ஸ் கோரிக்கை. அதோடு சம்பந்தப்பட்ட வீடியோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்க வேண்டும், அதோடு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நிறுவனம் கோரி இருக்கிறது.
ஒரு பிரபலத்தின் சமூக வலைத்தள ஜாலி கமெண்டுக்கு ஒரு நிறுவனம் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக சொல்லி இவ்வளவு பெரிய நஷ்ட ஈடு கேட்க முடியுமா? என்பது இப்போது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் சும்மா தானே வீடியோ போடுகிறோம் என்று யாரேனும் மற்றவர்களை பற்றியோ அல்லது மற்ற நிறுவனத்தைப் பற்றிய எதுவும் முழுமையாக தெரியாமல் இஷ்டத்துக்கு ரீல்ஸ் போட்டு சிக்கிக்காதீங்க என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
