ஜீ தமிழ் நிகழ்ச்சியால் போட்டியாளருக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்பு.. ரியல் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்
சென்னை: தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடனான சீரியல்கள் மற்றும் உண்மையான திறமைகளை கண்டறிந்து உலகறிய செய்யும் வகையில் சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் மகாநடிகை போன்ற ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பி வருகிறது.
ஞாயிறுதோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநடிகை நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற சரிதா, திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட விஜய் ஆண்டனி மற்றும் விருமாண்டி அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களின் திறமையை மேலும் மெருகேற்றி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் கிடைத்த இந்த மேடையை சரியாக பயன்படுத்தி மக்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் மகாநடிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரகுநாத் என்பவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் சமயத்திலேயே வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டேட் பிரச்சனையால் தொடர்ந்து மகாநடிகை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஐஸ்வர்யாவின் திறமை அடுத்தகட்டத்துக்கு செல்வதை புரிந்து கொண்ட நிகழ்ச்சி குழுவினர் அவரது வளர்ச்சிக்கு வழி கொடுத்து வாழ்த்தி திரைப்படத்தில் நடிப்பதற்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரகுநாத்தின் ரியல் திறமையை உலகறிய செய்த மகாநடிகை நிகழ்ச்சி குழுவிற்கும் சேனலுக்கும் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு முன்னதாக சரிகமப நிகழ்ச்சி மூலமாக போட்டியாளர் தர்ஷினியின் சொந்த ஊரில் பஸ் வசதியை ஏற்படுத்தி தர ஜீ தமிழின் சரிகமப முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications