அண்ணி சோபியாவோடு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த மனஸ்தாபம்? இணையத்தை ஈர்த்த மணிகண்டனின் 2வது மணம், குழந்தை
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், இரண்டாவது திருமணம் செய்து, குழந்தை பிறந்து இருப்பதை போட்டோவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. இதையடுத்து, மணிகண்டனின் முன்னாள் மனைவி சோஃபியாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிலடி தந்திருந்தார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.. அதில், ஐஸ்வர்யா ராஜேஷூக்கும், சோபியாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன், அட்டகத்தி படத்தில் நடித்த சோஃபியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. பிறகு மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதுகுறித்து, மணிகண்டன் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.. எனவே இது வெறும் வதந்தி என்றே கருதப்பட்டது.

இரண்டாவது மனைவி
ஆனால் தற்போது, தன்னுடைய இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்ததை அறிவித்துள்ளது பலருக்கும் வியப்பை தந்திருந்தது.. இதேநேரத்தில் முன்னாள் மனைவி சோஃபியாவும் தன்னுடைய இன்ஸ்டாவில், "இனி வாழ்க்கை அழகான பாதையை நோக்கி போகும், அழகான அத்தியாயத்திற்காக நான் தயாராக இருக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், King voice என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நடிகை ஐஸ்வர்யாவின் தம்பியின் பெயர் மணிகண்டன் ராஜேஷ்.. தன்னுடைய 2 வது மனைவியுடனும், குழந்தையுடனும் போட்டோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டிருந்தார்.. இது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது..
முதல் மனைவி பதிவு
எப்போது மணிகண்டன் 2வது திருமணம் செய்தார் என்பது யாருக்குமே தெரியாத நிலையில், இப்போது குழந்தையும் பிறந்துள்ளது.. அதேசமயம், முதல் மனைவி வெளியிட்டிருந்த பதிவும் இணையத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.. சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து, பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தாத நடிகர் மணிகண்டன்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிகண்டன் போட்டியாளராக பங்கேற்றபோதுதான், அவருக்கு புகழ் அதிகரித்தது.. ஆனாலும், புதிய படம் எதிலுமே அவர் ஒப்பந்தம் ஆகவில்லை. சமீபத்தில் மணிகண்டன், ஒரு டான்ஸ் கிளப்பை ஆரம்பித்துள்ளார்.. இந்த டான்ஸ் கிளப்பை, நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்திருந்தார். சினிமா பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்..
மணிகண்டன் முதலில் நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்தார்.. அட்டக்கத்தி படத்தில் நடித்திருந்தவர்தான் இந்த சோபியா.. பிறகு விஜய் டிவி, ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் கதாநாயகியாக சோபியா நடித்து கொண்டிருந்தார்..
சீரியலில் பிரபலம்
சன் டிவியில் ஒளிபரப்பான மருமகள் என்ற தொடரிலும் வில்லியாக நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.. அப்போதுதான், சோபியாவை காதலித்து திருமணம் செய்தார்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிகண்டன் கலந்துகொண்டபோது, மகனுடன் சோபியா, அந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வந்திருந்தார்.. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை,, சோபியாவும், மணிகண்டனும் விவாகரத்து செய்து கொண்டார்கள்..
ஆனாலும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தியை அறிவிக்கவில்லை.. அதேசமயம், சோஷியல் மீடியாவில் சோபியாவுடன் எடுத்து பதிவிட்டிருந்த போட்டோக்களை மணிகண்டன் நீக்கியிருந்தார்.. அப்போதுதான் இருவரும் பிரிந்த விஷயமே தெரியவந்தது.
2வது மனைவி யார்
இந்நிலையில்தான், 2வது மனைவிக்கு குழந்தை பிறந்ததை மணிகண்டன் தற்போது அறிவித்துள்ளார்.. எனினும் 2வது மனைவி யார் என்பது பற்றிய விவரத்தை தெரிவிக்கவில்லை..
ஐஸ்வர்யாவுக்கும், சோபியாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்காகவே தன்னுடைய அக்கா ஐஸ்வர்யாவுடன் பேசாமல் பிரிந்திருந்தார் மணிகண்டன். விவாகரத்துக்கு பிறகுதான், அக்கா , தம்பி இருவரும் இணைந்து பல விழாக்களில் பங்கேற்று வருகின்றனர்.
2வது திருமணம், குழந்தை பிறந்ததை மணிகண்டன் பதிவிட்டுள்ள இந்நிலையில், சோபியாவும் இணைய பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.. அதில், புதிய அத்தியாயம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, நான் இன்னும் வலிமையாக இருக்கிறேன் என்று பெருமிதப்பட்டு தெரிவித்துள்ளார். ஆனால், மணிகண்டனின் 2வது திருமணத்துக்கு எந்த எதிர்ப்பையும் சோபியா தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications