படிப்பு முக்கியம்! இயக்குனர் குழந்தைகளுக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த உதவி! அதுவும் இத்தனை லட்சமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக இயக்குனர் சங்கத்திற்கு ஆண்டுதோறும் ரூபாய் 10 லட்சம் உதவி செய்வதாக அறிவித்திருக்கிறார். அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாடகி லதாவின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பின்னணி பாடகி ஆகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், இயக்குனராகவும் இருந்து வருகிறார். 3 திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் நடிகர் ஜீவா மற்றும் சங்கீதாவோடு சேர்ந்து இவரும் நடுவராக கலந்து கொண்டார்.

தன்னுடைய கணவர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கி இருந்த நிலையில் அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து தன்னுடைய தந்தையை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். அதே நேரத்தில் சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக ஐஸ்வர்யா இருந்து வருகிறார். அடிக்கடி ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் இப்போது அவர் செய்த செயலும் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. அதாவது சமீபத்தில் அவர் இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கி வரும் நிலையில் இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் சங்கத்தில் குழந்தைகளின் படிப்புக்காக தான் வருடத்திற்கு 10 லட்சம் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தர போவதாக அறிவித்திருக்கிறார்.

அதற்கு முன்னேற்பாடாக இயக்குனர் சங்கர் தலைவர் ஆர்.வி உதயகுமாரிடம் ஐந்து லட்சம் காசோலையை வழங்கி இருக்கிறார். அப்போது அது பற்றி பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நான் சில திரைப்படங்களில் இயக்கி இருக்கிறேன். என்னைப் போல இயக்குனர்களாக இருக்கும் பலர் அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவுக்காக ஏதாவது உதவி செய்யலாம் என்று கேட்டு வருகிறார்கள். எனக்கோ அது சரியான விஷயம் என்று தோன்றியது.
என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். இதுபோன்று தமிழ் இயக்குனர் சங்கத்தில் இருக்கும் இயக்குனர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக பலர் உதவ வேண்டும் என்று அந்த பேட்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications