ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்தா? உலக அழகியின் இன்ஸ்டா போஸ்ட்டை பாருங்க!
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் ஐஸ்வர்யா ராய் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும், அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் 2011 ஆம் ஆண்டு பிறந்தார்.

இநத் நிலையில் இருவரது வாழ்க்கையும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அது போல் அபிஷேக் பச்சன் வேறு ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
வெளிப்படை பேச்சு
இதையடுத்து அந்த நடிகையும் ஒரு முறை வெளிப்படையாக பேசி, அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா பிரிவுக்கு தான் காரணமில்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இந்த நிலையில்தான் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சன்டுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது ஐஸ்வர்யா ராய், ஆராத்யா பச்சன் ஆகியோர் தனியேவும், அபிஷேக், அமிதாப், ஜெயா ஆகியோர் தனியேவும் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யாவின் கையில் திருமண மோதிரம்
அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவின் கையில் திருமண மோதிரமும் இல்லை என சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் 51ஆவது பிறந்தநாளுக்கு அபிஷேக் பச்சன் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தார்.
அபிஷேக் வாழ்த்து
அது போல அபிஷேக் நடிப்பில் வெளியான ஐ வான் டூ டாக் என்ற படத்திற்கும் ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் விவாகரத்து உறுதி என்றே பேச்சுக்கள் அடிப்பட்டன. மேலும் விவாகரத்து குறித்து ஒரு இன்ஸ்டா பதிவிற்கு அபிஷேக் பச்சன் லைக் போட்டிருந்தார்.
காதல் ஏன்
காதல் ஏன் எளிதாக இருப்பதை நிறுத்துகிறது என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் அந்த பதிவில் விவாகரத்து என்பது யாருக்கும் எளிதானது இல்லை. வயதான தம்பதிகள் தெருவைக் கடக்கும் போது கைகோர்த்து நிற்கும். அந்த மனதைக் கவரும் வீடியோக்களை மீண்டும் உருவாக்குவதைப் பற்றி யார் கனவு காண மாட்டார்கள்?
உறவுகளைத் துண்டிக்க
உறவுகளைத் துண்டிக்க எது அவர்களை தூண்டுகிறது. அவர்கள் என்ன சவால்களை எதிர்கொள்கிறார்கள். 50 வயதிற்கு பிறகு திருமணத்திலிருந்து விலக விரும்புபவர்களுக்கான விதிமுறைகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன என்ற பதிவிற்குத்தான் அவர் லைக் போட்டிருந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா ஆகியோர் வெளிநாடு சென்றிருந்தனர். அவர்கள் வெளிநாடு சென்றுவிட்டு மூவரும் ஒன்றாக வரும் வீடியோவும் வைரலானது.
இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இல்லை. இருவரையும் சேர்த்து வைத்ததே ஆராத்யாதான் என நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் அபிஷேக்கிற்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் நேற்று 18ஆவது திருமண நாள் ஆகும்.

திருமண நாள்
இதையொட்டி ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதில் அபிஷேக், ஆராத்யா, ஐஸ்வர்யா ஆகிய மூவரும் இருக்கிறார்கள். மூவரும் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா செல்பிக்கு மற்ற இருவரும் போஸ் கொடுத்தனர். அப்போது அபிஷேக் தனது இரு கைகளையும் மகள் மீதும் மனைவி மீதும் போட்டிருக்கிறார்கள். இதனால் விவாகரத்து என கூறியது எல்லாம் வதந்தியாக இருக்கலாம் என்கிறார்கள்.
என்ன நடந்திருக்கும்
இல்லாவிட்டால் மகளுக்காக இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கலாம் என்கிறார்கள். மேலும் அம்பானி வீட்டில் எதேச்சையாக நடந்ததை எல்லாம் நெட்டிசன்கள் முடிச்சு போட்டு விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ கலையுலகில் மேட் ஃபார் ஈச் அதர் என சொல்லப்படும் இந்த ஜோடி ஒற்றுமையாக இருப்பதை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications