அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு
சென்னை: நடிகர் அஜித் குமாரின் அம்மா மோகினி மணி (85) இன்று காலமான செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுவதும் அஜித்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் பதிவுகள் குவிந்து வரும் நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் குமார், தனது குடும்ப வாழ்க்கையை எப்போதும் தனிப்பட்டதாகவே வைத்திருந்தவர். குறிப்பாக தனது பெற்றோர் குறித்து பொதுவெளியில் அதிகம் பேசியதில்லை. இப்படிப்பட்ட நிலையில், அவரது தாயார் மோகினி மணி காலமான செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தின் தூணாக இருந்த மோகினி மணி
மோகினி மணி, மறைந்த பி.எஸ். மணியின் துணைவியார். அஜித் குமார், அனுப் குமார், அனில் குமார் ஆகிய மூன்று மகன்களின் அம்மா. குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருந்த முக்கியமான நபராக அவர்தான் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை பி.எஸ். மணி காலமானார். அந்த சோகத்தில் இருந்து குடும்பம் முழுமையாக மீண்டு வருவதற்குள் தற்போது தாயாரையும் இழந்துள்ளது அஜித் குடும்பத்திற்கு மிகப்பெரிய துயரம்.
இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
மோகினி மணியின் மறைவு செய்தி வெளியான உடனே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் பதிவுகளை பகிர தொடங்கினர். "தந்தைக்கு பிறகு தாயாரையும் இழந்த அஜித்திற்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்", "இந்த துயரத்தை தாங்கும் மன வலிமை அவருக்கு கிடைக்க வேண்டும்" போன்ற கருத்துக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வைரலாகும் மு.க.ஸ்டாலின் பதிவு
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அவர் தனது பதிவில், "அன்புச் சகோதரர் அஜித்குமார் தாயார் திருமதி மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்." என்றும் தெரிவித்துள்ளார்.

நெகிழ வைத்த வார்த்தைகள்
மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய "அன்புச் சகோதரர் அஜித்குமார்" என்ற வார்த்தைகளும், "தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை" என்ற வரிகளும் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
அவரது பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அதை பகிர்ந்துள்ளனர். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இறுதிச்சடங்கு எப்போது?
மோகினி மணியின் இறுதிச்சடங்கு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் இல்லத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஹீரோவாக இருக்கும் அஜித், தற்போது வாழ்க்கையின் மிகப்பெரிய தனிப்பட்ட இழப்புகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பினரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!














Click it and Unblock the Notifications