சிவகார்த்திகேயன் மகளும், அஜித் மகனும் கால்பந்து ஆட்டத்தில் கலக்குறாங்களே! ஷாலினியின் ரியாக்ஷன்!
சென்னை: தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான நடிகர் அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் வாரிசுகள் இணைந்து விளையாடும் வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாசமிகு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அஜித் மகன் ஆத்விக் அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா இருவரும் கால்பந்து விளையாடும் இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த குடும்பம்
நடிகர் அஜித் தற்போது தனது முழு கவனத்தையும் கார் ரேஸிங் மீது செலுத்திக் கொண்டிருக்க, கோலிவுட்டில் AK 64 படத்திற்கான தயாரிப்புப் பேச்சுக்கள் ஒருபுறம் போய்க் கொண்டிருக்கின்றன. இதே நேரத்தில், அவருடைய மகன் ஆத்விக் மற்றும் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா விளையாடும் இந்த வீடியோ தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நட்பின் தொடர்ச்சி
அஜித் - சிவகார்த்திகேயன் இடையேயான நட்பு ஏற்கனவே ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்று. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்தபோது இரு நடிகர்களும் குடும்பத்துடன் இணைந்து மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசித்த புகைப்படங்கள் வைரலானது நினைவிருக்கலாம். அந்தக் குடும்பப் பிணைப்பின் ஒரு புதிய சான்றாகவே இந்த கால்பந்து வீடியோ அமைந்துள்ளது.
இந்த வீடியோவில், ஆத்விக் மற்றும் ஆராதனா ஒரு சிறிய மைதானத்தில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்க, நடிகை ஷாலினி மற்றும் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி ஆகியோர் பக்கத்தில் அமர்ந்து அவர்களைப் பெருமையுடன் ரசித்துக் கொண்டிருப்பது பார்க்கவே அழகாக உள்ளது.
விளையாட்டு வாரிசு
அஜித் மகன் ஆத்விக் குறித்துப் பேசினால், அவருக்கு விளையாட்டுத் துறையில் உள்ள ஆர்வம் எல்லோருக்கும் தெரிந்ததே. கால்பந்து, ஓட்டப்பந்தயம், கிரிக்கெட் எனப் பல துறைகளில் அவர் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு சிறிய ரேஸ் கார் ஓட்டிய வீடியோவும் வைரலானது. தந்தையைப் போலவே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதும் அவருக்கு ஆர்வம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனாலும், ஆத்விக்கின் மிகப்பெரிய ஆர்வம் கால்பந்துதான். தற்போது வெளியான புதிய வீடியோவில் அவர் மைதானத்தில் பந்தைத் திறமையாகக் கையாளும் விதம், "அப்பா ரேஸில் கிங், மகன் மைதானத்தில் கிங்" என்று ரசிகர்களைப் பாராட்ட வைத்துள்ளது.

அசத்தும் கோல் கீப்பர்
அதேபோல, சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் சற்றும் சளைத்தவர் இல்லை. அவர் ஆத்விக்கிற்குப் போட்டியாக கோல் கீப்பராக செயல்பட்டு விளையாட்டைப் பார்க்கவே சுவாரஸ்யமாக்குகிறார். பந்தை அவர் தடுத்து ஆடும் விதம், தந்தையின் துறுதுறுப்பைக் காட்டுவது போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த இருவரின் விளையாட்டுத் திறமைகளைப் பார்த்த ரசிகர்கள், "இந்த வாரிசுகளின் நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடரட்டும்!" என்று சமூக வலைதளங்களில் அன்பைப் பொழிந்து வருகிறார்கள். இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படம் பராசக்தி பொங்கல் ரிலீஸாக வெளியாகவுள்ள நிலையில், அதன் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Star moments at Go Play: #AadvikAjithkumar and Aaradhana #Sivakarthikeyan #AjithKumar #ShaliniAjithkumar pic.twitter.com/aZvy9ZMqQZ
— Prakash (@prakashpins) November 17, 2025
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications