ஏ.கே.யின் இதயத்தில் 'பகவதி அம்மன்'! வெற்றிகளை குவித்த அஜித், குலதெய்வ பாசம்! வைரலாகும் டாட்டூ ரகசியம்
சென்னை: தமிழ் திரையுலகில் எந்தவிதமானப் பின்புலமும் இல்லாமல், தனது கடும் உழைப்பால் மட்டுமே உச்சம் தொட்டவர் நடிகர் அஜித் குமார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தொடர் தோல்விகளைச் சந்தித்த போதும், மன உறுதியுடன் போராடி, இன்று தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமா வெற்றிகளைத் தாண்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நம்பிக்கைகளுக்காகவும் அவர் அடிக்கடிப் பேசுபொருளாகி வருகிறார். அந்த வகையில், தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் அவர் கோவிலுக்குச் சென்றபோது எடுத்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது நெஞ்சில் இருக்கும் டாட்டூவின் பின்னணி ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் ஆண்டு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டு அஜித்துக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கிறது. பிப்ரவரி மாதம் ரிலீஸான 'விடாமுயற்சி' படம் படுதோல்வியைச் சந்தித்தாலும், அதைத் தொடர்ந்து ஏப்ரலில் திரைக்கு வந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அஜித்தின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கிப் பிடித்தது.
வசூல் சாதனை
அஜித்தின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை இந்த படம் படைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 240 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது.

குலதெய்வ தரிசனம்
'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிக்குப் பின்னர் கார் ரேஸில் பிசியாக இருந்த நடிகர் அஜித், தற்போது தனது அடுத்த படமான 'ஏகே 64 க்குத் தயாராகி வருகிறார். அஜித்தின் அடுத்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார். இந்தப் படத்தைக் 'ரோமியோ பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.
AK 64 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்னர், நடிகர் அஜித், தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கேரளா மாநிலம் பாலக்காடில் உள்ள தனது குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் அஜித்தின் தந்தை பாலக்காடைச் சேர்ந்தவர் என்பதால், அந்த அம்மன் தான் அவர்களின் குலதெய்வமாகக் கருதப்படுகிறது.

நெஞ்சில் குலதெய்வம்: டாட்டூவின் ரகசியம்
கோவிலில் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானபோது, ரசிகர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தனர். அது, அவர் நெஞ்சில் சாமி உருவத்தைப் பச்சை குத்தி இருந்ததுதான்! இதைப்பார்த்த நெட்டிசன்கள் அது என்ன சாமி என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வந்தனர். அதன்படி, அவர் தன்னுடைய குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மனின் உருவத்தைத்தான் தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.
பாராட்டு
மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருந்தும், தனது பூர்வீக நம்பிக்கைகள் மற்றும் குல தெய்வத்தின் மீது அஜித் கொண்டிருக்கும் இந்த ஆழமானப் பாசம் மற்றும் பக்தியைக் கண்டு ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் பாராட்டினர். தோல்வி, வெற்றி என எந்தச் சூழலிலும், தன்னைத் தாங்கி நிற்கும் குலதெய்வத்தை இதயத்திற்கு அருகிலேயே தாங்கிக் கொண்டிருக்கும் அஜித்தின் இந்தப் பக்தி உணர்வு, பலருக்கும் முன்மாதிரியாக உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications