கால்பந்து போட்டியில் அஜித் மகன் ஆத்திவ் அணி வெற்றி.. ஷாலினி நெகிழ்ச்சி.. வெற்றி மட்டும் முக்கியமல்ல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து அணி சமீபத்தில் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவருடைய அம்மா ஷாலினி பகிர்ந்து உள்ள புகைப்படங்கள் மற்றும் கேப்ஷன் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. வெற்றி தோல்வியை தாண்டி விளையாடுவதில் இருக்கும் மகிழ்ச்சி தான் முக்கியம் என்ற கருத்தை ஷாலினி தன்னுடைய போஸ்டில் பகிர்ந்து இருக்கிறார்.

ஆத்விக் சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். குறிப்பாக கால்பந்தில் அவருக்கு இருக்கும் ஆர்வம் அஜித்தை ஃபாலோ பண்ணும் பலருக்கும் தெரியும். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் கால்பந்து போட்டியில் ஆத்திவ் தனது அணியுடன் தங்க பதக்கம் வென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.

Ajith Shalini Ajith Advik Ajith

அஜித் மகன்

ஆத்விக்கின் விளையாட்டு ஆர்வம் கால்பந்துடன் முடியவில்லை. பள்ளி, விளையாட்டு விழாவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம் மற்றும் ரிலே போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடிய 3 பதக்கங்களை வென்றுள்ள இந்த சாதனையை ஷாலினி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த போது அஜித் ரசிகர்கள் பலரும் "Like father Like son" என்று வாழ்த்து தெரிவித்தனர்.

இப்போது மீண்டும் கால்பந்து போட்டியில் ஆத்விக் அணி வெற்றி பெற்று இருப்பது அவரது விளையாட்டு பயணத்தில் முக்கிய தருணமாக மாறி இருக்கிறது. ஆத்விக்கின் அணி வெற்றியை பகிர்ந்த ஷாலினி வெற்றி மட்டுமே விளையாட்டின் நோக்கம் அல்ல என்பதை சொல்வது போல, அவர்கள் விளையாடுவதை பார்க்க அழகாக இருந்தது, ரிசல்ட் என்ன என்பதை விட விளையாட்டும் மகிழ்ச்சி தான் முக்கியம்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Ajith Shalini Ajith Advik Ajith

கால்பந்து போட்டியில் அஜித் மகன் வெற்றி

மகனின் வெற்றியை கொண்டாடுவதுடன் குழந்தைகள் விளையாட்டை அணுக வேண்டிய விதத்தையும் இது அழகாக வெளிப்படுத்துகிறது. குழந்தைகள் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பை விட அவர்கள் விளையாட்டில் ஈடுபட்டு குழுவாக செயல்பட்டு தோல்வியையும், வெற்றியை அனுபவித்து வளர வேண்டும் என்பதை ஷாலினி இந்த பின்னணியின் சொல்லி இருப்பதாக ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

அஜித்தின் குடும்பத்தில் விளையாட்டுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும் போது ஆத்விக்கின் ஆர்வம் ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இல்லை. அஜித் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பதுடன் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அவர் சமீப ஆண்டுகளில் தனது சொந்த பந்தய அணியுடன் பல்வேறு போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரத்தில் அவரது மகன் கால்பந்து மைதானத்தில் தனது திறமையை காட்டி வருகிறார்.

Ajith Shalini Ajith Advik Ajith

அப்பாவை போல மகன்

இதனால் அப்பா ரேசிங் டிராக்கில்... மகன் கால்பந்து மைதானத்தில்.. என்று அஜித் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். அஜித் ஏற்கனவே தன்னுடைய மகனுக்கு இருக்கும் கால்பந்து ஆர்வத்தை மோட்டிவேஷன் செய்கிற மாதிரி பல விஷயங்களை செய்திருக்கிறார். ஒருமுறை ஆத்விக் விரும்பிய கால்பந்து போட்டியை பார்க்க அவரைப் பிரேசிலுக்கு அழைத்து சென்றிருந்தார். அப்போது அஜித் தனது படப்பிடிப்பு மற்றும் ரேசிங் பணிகளுக்கு இடையிலும் மகனின் விருப்பத்துக்கு முக்கியம் கொடுத்து இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வந்தனர்.

அம்மாவின் சப்போர்ட்

2023 ஆம் ஆண்டு அஜித் ஷாலினி மற்றும் ஆத்விக் ஆகியோர் கால்பந்து மைதானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டது அப்போது ரசிகர்கள் குட்டி மெஸ்ஸி என்று அழைத்தனர். அஜித்தின் வாழ்க்கையில் கார் மற்றும் பைக் ரேஸ் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஷாலினியும் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அவர் பேட்மிட்டனில் சாதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்விக்கின் விளையாட்டு ஆர்வத்தை பார்க்கும்போது குடும்பத்தில் இருந்து அவருக்கு கிடைத்த விளையாட்டு சூழலும் முக்கியமானதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+