வீட்டுக்கு போய் நான் காலில் விழணும்.. அஜித் அடித்த டைமிங் ஜோக்.. உருகிய ஷாலினி
சென்னை: நடிகர் அஜித்குமார் தன் மனைவி ஷாலினியுடன் கோயில் சென்றுள்ளார். அப்போது ஷாலினி அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். ஷாலினியை தொட்டு தூக்கிய அஜித், வீட்டுக்கு போய் நா விழணும் என்று ஜோக் அடிக்க இந்த க்யூட் வீடியோ சமூகவலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
சினிமா ஆன் ஸ்க்ரீனிலும் சரி, ஆஃப் ஸ்க்ரீனிலும் அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல தம்பதிகள் பிரிந்து வருகிறார்கள். நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பிரிந்துள்ளனர். குறுகிய காலத்தில் டிரெண்ட் ஆன மாதம்பட்டி ரங்கராஜ் கூட தன் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

அஜித் - ஷாலினி
ஆனால் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித் - ஷாலினி தம்பதி இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டபோதும், அழகான காதல் மற்றும் ஆழமான புரிதலுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் தலைகாட்டா விடினும் அஜித் கார் ரேஸ் மற்றும் குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிடுதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அஜித்குமார் திரை உலகில் அறிமுமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கைவிட்டிருந்த அவர், ஒருபோதும் என்னுடைய தனிப்பட்ட தேவைக்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என்று அஜித் கூறியிருந்தார். பொதுவாக மற்ற நடிகர்கள், தங்கள் பட அப்டேட்களை ரசிகர்களுக்கு தெரிவிப்பதற்காகவே பெரும்பாலும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.
தலயின் ஹ்யூமர்
ஆனால், ரீல் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் ரியல் வாழ்க்கையிலும் அஜித் முன்மாதிரியாக இருப்பதாக அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பொதுவாக அஜித் தன் குடும்பத்துடன் செலவிடும் வீடியோக்களில் சிலவற்றை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம். அப்படி ஷாலினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் முரட்டு வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில் அஜித் - ஷாலினி தம்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அஜித் பக்கா ஃபார்மல் காஸ்ட்யூம், ஷாலினி புடவையுடன் இருக்கிறார்கள். அஜித் ஷாலினுக்கு பொட்டு வைத்து விடுகிறார். அப்போது ஷாலினி அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயற்சி செய்தார். அஜித் வேண்டாம் என கைவைத்து தடுத்து விட்டார். சுற்றி இருந்தோர் 'வாட் இஸ் திஸ்' என கமென்ட் அடிக்க, ஷாலினி அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.
உருகிய ஷாலினி
அவரை தொட்டு தூக்கிய அஜித், "வீட்டுக்கு போய் நான் விழணும்." என்று கவுன்டர் கொடுக்க சுற்றி இருந்த அனைவரும் குபீரென்று சிரித்தனர். பிறகு அவர்கள் பிரசாதம் வாங்கி திரும்பியுள்ளனர். இந்த வீடியோவை ஷாலினி, "Melts my heart.. Cracks me up" என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும், அஜித் பண்பான குடும்ப மனிதர் என்று தெரியும். ஆனால் அவருக்குள் இவ்வளவு ஹ்யூமர் இருக்கிறதா என்று வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். இதனை க்யூட்டஸ்ட் வீடியோ ஆஃப் தி டே என்று அஜித் ரசிகர்கள் பரவசமடைந்து வருகிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications