Good Bad Ugly Box office: 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா? கலக்கும் குட் பேட் அக்லி
சென்னை: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ஆறு நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிலையில் 6 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் பெற்றிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமீபகாலமாகவே பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் பல திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறாமல் போய்விடுகிறது. சின்ன பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் கூட ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்துக்கு கம்பேக் கொடுத்து இருக்கிறது.

செம சம்பவம்
அஜித் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. ஆனாலும் அவருடைய அடுத்த படம் அவருக்கு பாராட்டு மழைகளை பொழிந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேஃன் பாய் சம்பவம் செய்து இருக்கிறார்.
அதிகரித்த வசூல்
முதல் வார இறுதியில் அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 170 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் என்ற வலைதளத்தின் தகவல் படி குட் பேக் அக்லி திரைப்படம் ஆறாவது நாள் நிலவரம் பற்றி பார்க்கலாம். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 6.25 கோடி ரூபாய் வசூலை பெற்று மொத்தமாக 102.85 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
விடுமுறை நாள்
திங்கள்கிழமை சித்திரை ஒன்று என்பதற்காக விடுமுறை விடப்பட்டதால் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான ஐந்து நாட்களும் நல்ல வசூல் பெற்றிருக்கிறது. ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் ஒரே நாளில் படத்தின் வசூல் பாதியாக குறைந்து இருக்கிறது. இதை அடுத்து இந்த திரைப்படம் இந்திய அளவில் 119 புள்ளி 35 கோடி ரூபாய் வசூல் செய்து உலக அளவில் 171 கோடி ரூபாய் வசூல் பெற்றதாக கூறப்படுகிறது.
முதல் நாள் வசூல்
முதல் நாளில் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று கூறப்பட்டது உலக அளவில் 57 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் இரண்டாவது நாளில் 28 கோடி ரூபாய் வசூல் செய்தது மீண்டும் வார இறுதியில் வசூல் அதிகரித்தது. மூன்றாம் நாளில் 36.59 கோடி ரூபாயும் நான்காம் நாளில் 37 கோடி வசூல் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில் குட் பேட் அக்லி திரைப்படம் அதிக வசூல் செய்த படங்களில் லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான மத கஜ ராஜா, வீரதீரசூரன் படங்களை பின்னுக்கு தள்ளி குட் பேட் அக்லி முன்னுக்கு வந்திருக்கிறது இந்த வாரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் குடும்பத்தினரும் பிசியாக இருப்பதால் தேர்வுகள் நாளை மறுநாள் உடன் முடிவடைய இருக்கும் நிலையில் அதற்குப் பிறகு விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications