Good Bad Ugly box office: சம்பவம்னா இதுதான்! 9 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? பட நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ஒன்பது நாட்களில் எத்தனை கோடி வசூல் பெற்று இருக்கிறது என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்களை கணக்கு செய்து இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. அதுபோல ஆக்சன் திரில்லர் கலந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதுவும் இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Ajith Kumar Arjun Das Good Bad Ugly Movie

குட் பேட் அக்லி நடிகர்கள்

ஆறாவது முறையாக இந்த படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதுபோல அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன்தாஸ் நடிக்கிறார். கூடவே பிரசன்னா, யோகி பாபு, கிங்ஸ்லி போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் அதிகமான பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது சுவாரசியமாக இருக்கிறது என்று சிலர் கூறினாலும் ஒரு சிலர் இது அலுப்பை ஏற்படுத்துகிறது என்று கூறி வருகிறார்கள்.

முதல் வார வசூல்

அஜித் கேரியரில் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்ட படம். வெளியான முதல் நாளில் இந்த திரைப்படம் 148 கோடி வசூலித்ததாக சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டது. இரண்டு வார இறுதியில் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வசூலை தாண்டி பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் என்று கோடம்பாக்கம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது வார வசூல்

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை அறிவித்திருக்கிறார். அதில் உலக அளவில் இந்த படம் தற்போது வரை 200 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பலமொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படம் அஜித்துக்கு பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.

அதிகரிக்கும் வசூல்

இந்த வசூலை பார்க்கும்போது அஜித் கேரியரிலே அதிகமான வசூலை பெற்ற திரைப்பட லிஸ்டில் இதுவும் இணைந்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க விருந்தாக அமைந்திருக்கிறது. சீனுக்கு சீன் விறுவிறுப்பான ஸ்கிரீன் பிளேவை ஆதிக்க வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்த படத்தை பற்றி பேச வைத்திருக்கிறார்.

விடுமுறை நாள்

அதிலும் இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வரும் நிலையில் திங்கட்கிழமை வசூல் நிலவரம் இதைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் வெளியான மத கஜராஜா, வீரதீர சூரன் படங்களை பின்னுக்கு தள்ளி குட் பேட் அக்லி முன்னுக்கு வந்திருக்கிறது. இந்த வாரத்தில் பல பள்ளி குழந்தைகளுக்கும் விடுமுறைகள் விடப்பட்டிருப்பதால் அடுத்த வாரத்தில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+