barathi kannamma serial: கெட்ட பையன் டி இந்த அகிலன்....!
சென்னை: கெட்டப் பையண்டா இந்த காளி என்பது போல கெட்ட பையன் டி இந்த அகிலன் என்று அஞ்சலிக்கு ஆட்டம் காட்டுகிறான் அகிலன். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் காட்சியில்தான் மேற்கண்ட டயலாக்கை பொண்டாட்டி அஞ்சலியிடம் பேசறான் அகிலன்.
கண்ணம்மா அஞ்சலியின் அக்கா, அதாவது அப்பாவின் முதல் தாரத்துக்கு பிறந்த பொண்ணு. கருப்பு கண்ணம்மாவை எப்படி மாமியாருக்கு பிடிக்காதோ, அது போல அஞ்சலிக்கும் பிடிக்காது. ஆனால், இருவரும் ஒரே வீட்டுக்கு மருமகள்கள். மாமியாருக்கு பிடித்த மருமகள் அஞ்சலி.
கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்திடணும்னு மாமியாரைப் போலவே இவளும் நினைக்கிறா. இவளை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்ட அகிலனுக்கு அஞ்சலியின் போட்டுக் கொடுக்கும் புத்தி பிடிக்காமல் போகிறது. அப்போதுதான் விழிச்சுக்கறான் அகிலன். இனி அஞ்சலியை சும்மா விடக் கூடாதுன்னு விளையாட்டை ஆரம்பிக்கறான்.

மெத்தை படுக்கையில்
அகிலனை முன்பு பிடிக்காமல் இருந்தது அஞ்சலிக்கு. இப்போது ஒரு வழியாக பிடிக்க ஆரம்பிக்கிறது. எப்போதும் மெத்தையில் அஞ்சலி, கீழே அகிலன் என்று படுத்துக்கொண்டு இருப்பார்கள். இப்போது,நான் எதுக்கு கீழே படுக்கணும்? இது என்னோட பெட் ரூம் இனிமேல் நான்தான் ஹாயா பெட்டில் படுத்துக்குவேன். நீ இஷ்டம் இருந்தா கீழே படு. இல்லேன்னா வெளியில் போயி படுத்துக்கோன்னு சொல்றான். இல்லை அகில் ரெண்டு பேரும் பெட்டில் படுத்துக்கலாமே என்று அஞ்சலி சொல்ல, இத்தனை நாள் நான் கீழே படுத்து இருந்தேனே அப்போ என்னை இப்படி சொல்லி நீ கூப்பிட்டியா.. நீ கீழத்தான் படுக்கணும்னு சொல்லிட்டு தூங்கிடறான்.

கண்ணம்மா அண்ணி
கண்ணம்மா அண்ணி உனக்கு அக்காதானே அஞ்சலி. அவங்களை பத்தி உன் அம்மா, பாட்டிகிட்டே போட்டுக் கொடுத்து சந்தோஷப்படுறியே.. உன் புத்தி எனக்கு பிடிக்கலை அஞ்சலி. இந்தப் பழக்கத்தை எப்போ நீ விடறியோ அப்போதுதான் எனக்கு உன்னை பிடிக்கும்னு சொல்றான். அஞ்சலி பாட்டிகிட்டே அகில் சொன்னதை சொல்ல, திருந்தறதுதான் கஷ்டம்.. திருந்துற மாதிரி நடிக்கறது ஈஸிடி அஞ்சலி. அப்படியாவது நடிச்சு அகிலனோட மனசில் இடம்புடின்னு பெரிய மனுஷி சொல்லித் தராங்க.

திருந்தணும்னுதான் நினைக்கிறேன்
அகில் நானும் திருத்தணும்னுதான் நினைக்கிறேன்.. ஆனால், என்னால முடியலை அகில்னு அஞ்சலி அகிலன்கிட்டேயே சொல்றா. பரவால்ல அஞ்சலி நீ திருத்தணும்னு நினைக்கிறியே அதுவே பெரிய விஷயம். நீ மேனுஃபேக்ச்சர் டி ஃபால்ட் அஞ்சலி. ரொம்ப பெரிய முயற்சி எடுத்து நீயா திருந்தினாத்தான் உண்டுன்னு சொல்றான். இல்லை அகில் நான் கொஞ்சம் கொஞ்சமா திருந்திடறேன்னு சொல்றா அஞ்சலி.

கண்ணம்மாவை துரத்த
அஞ்சலி தனக்கு ஸ்பெஷலா வச்சு இருக்கும் வேலைக்காரி வந்து, அம்மா உங்களுக்கு தெரியாதா? கண்ணம்மாவை சவுந்தர்யா அம்மா வீட்டை விட்டுத் துரத்திட்டு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கப் போறாங்களாம். நீங்க கீழே வந்து பார்த்து இருக்கணுமே கண்ணம்மா அழுதுகிட்டே ஓடின அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்காம விட்டுட்டீங்கன்னு சொல்றா வேலைக்காரி நிம்மி. அஞ்சலி பளார்னு ஒரு அறை விட என்னம்மா அடிச்சுட்டீங்க... சந்தோஷப்பட்டு எனக்கு பணம் தருவீங்கன்னு பார்த்தான்னு சொல்லிக்கொண்டே இருக்கையில் அகில் கைத் தட்டி அஞ்சலியை பாராட்டறான்.

இது உண்மைதானா?
ஆனால், அகிலுக்கு சந்தேகம் வந்து அவள் போனை எடுத்து தனக்கு ரிங் செய்துக்கொண்டு கீழே போயி போனை ஆன் செய்து காதில் வச்சா... அஞ்சலி நிம்மிக்கிட்டே எனக்கு மட்டும் சந்தோஷமில்லையா நிம்மி. கண்ணம்மா வீட்டை விட்டுப் போகப் போற இந்த சந்தோஷத்தை உடனே பாட்டி, அம்மாகிட்டே சொல்லணும்னு சந்தோஷமா சொல்லிக்கிட்டு இருக்க, அகிலன் வந்துடறான். கெட்ட பையன் டி இந்த அகில்னு சொல்லிகிட்டே கிட்ட வந்து நான் சொல்லலை.. நீ மேனுஃபேக்ச்சர் டி ஃபால்ட்ன்னு என்று சொல்லி போனை காண்பிக்கறான்.
மனைவியாக இருந்தாலும் கெட்ட குணம் உடையவள் என்று தெரிந்து, அவளை திருத்த அகில் விளையாடுவது பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்படியாக இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications