ஆமா.. இது அதுல்ல.. ஆலியா சூதானமா இருங்க.. ராஜா ராணி 2.. வச்சு செய்யும் ரசிகர்கள்!
சென்னை: கொஞ்ச நாளாவே பிரம்மாண்டமாக படங்களாக இருந்தாலும் சரி பிறமொழி படங்களை தமிழில் மொழிபெயர்த்து சுட்டு மொழிபெயர்த்து நடித்து வந்தனர்.
இதை பார்த்து ரசிகர்களும் கலாய்த்து தள்ளி கொண்டு இருந்தாலும் தற்போது அந்த வரிசையில் சீரியல்களிலும் சுட்டு எடுக்கத் தொடங்கிவிட்டனர். இது சீரியல் ரசிகர்களிடம் கலவையான கருத்துக்களை கிளப்பியுள்ளது.
இந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகவுள்ள ராஜா ராணி 2 கதை, சுட்ட கதை என்று சொல்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தது.

காதல் திருமணம்
இந்த சீரியலுக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடித்த கதாநாயகனும் கதாநாயகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணமும் இதே டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்டது. டிவி நிகழ்ச்சியில் இவர்களது எங்கேஜ்மெண்ட் தடபுடலாக நடத்தி அசத்தி இருந்தனர்.

ஆலியா மானசா
சீரியல்களில் ஒன்றாக நடித்தவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும் ந்த ஜோடிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
நாயகி ஆலியா மானசா நடித்துக் கொண்டிருந்தபோதே கர்ப்பம் ஆனதால் கூடுதல் சந்தோஷத்தில் இருந்த அவரது கணவர் சஞ்சீவுக்கு இந்த சீரியலை முடிக்கும்போது மிகவும் கஷ்டமாக இருப்பதாக வருத்தப்பட்டுக் கூறியிருந்தார்.

சந்தோஷ ஜோடி
ஒன்றாக இந்த சீரியலில் இத்தனை வருடமாக நடித்தவர்கள் முடிக்கும்போது ரொம்பவே பீல் பண்ணி இருந்தனர். .அதன் பிறகு இருவரும் வீட்டில் இருந்த நிலையில் சஞ்சீவ் கார்த்திக் மட்டும் இதே விஜய் டிவியில் வேற சீரியலில் நடிக்க ஆயத்தமானார். அந்த சீரியலும் தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. சஞ்சீவ் காற்றின் மொழி என்னும் சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு ஆலியா மானசா ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார்.

மீண்டும் வந்த ஆலியா
அதன் பிறகு இருவரும் அந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டு வைரலாக பரவியது. ரசிகர்களும் அப்பா அம்மாவுடன் சேர்த்து குழந்தைக்கும் ரசிகர்களாகி விட்டனர். இப்போது ஆலியா மானசாவும் அடுத்த சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அதுவும் ராஜா ராணி பார்ட் 2 இந்த சீரியலின் பெயரை கேட்டதும் பல ரசிகர்களும் பழைய ராஜா ராணி தொடர்ந்து தான் வரப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது சீரியலுக்கான ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

இது காப்பியா
அதை பார்த்ததும் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். இந்த சீரியலில் ஆலியா மானசாவுடன் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கவில்லை. சித்து சித்தான் ஹீரோ போல. அதேபோல இது பழைய சீரியலின் தொடர்ச்சியும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதில் ஆலியா மானசா மற்றும் சித்து சித், ஸ்ரீநிதி சுதர்சன், பிரவீனா லலிதா பாய் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த சீரியலை பிரபல தொலைக்காட்சி இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்குகிறார்.

பாசக்கார மனைவி
ராஜா ராணி 2 சீரியலின் கதைப்படி, ஐபிஎஸ் ஆர்வலராக இருக்கும் ஹீரோ, இனிப்பு கடை வைத்திருக்கிறார். தனது தாயின் மீது பெரும் பாசமும் மரியாதையும் வைத்திருப்பது போல வரும் வருங்கால மனைவி மீதும் பாசம் வைக்கக் காத்திருக்கிறார். ஆனால் தாய் தனது வருங்கால மருமகள் தனது மகனை மட்டுமே முழு நேரமாக கவனித்து கொண்டு அவர் மீது பாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதாவது வீட்டோடு அடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

கணவன் மனைவி கதை
ஆனால் ஹீரோயினுக்கோ தான் ஐஏஎஸ் ஆபிஸர் ஆக வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். அதற்கு சப்போர்ட்டாக ஹீரோயினின் அப்பாவும் இருக்கிறார். இதில் சித்து சித் இருவரில் யாருக்கு சப்போர்ட் கொடுத்து யாருடைய ஆசையை நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் சீரியலின் கதைப் போக்காகும். இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் காண்டாகி இருக்கிறார்கள். ஏன் என்றால் தியா அவுர் பாத்தி ஹம் என்ற இந்தி சீரியலின் கதை போல இது இருக்கிறது. இந்த இந்த சீரியல் ஏற்கனவே "என் கணவன் என் தோழன்" என்ற பெயரில் வெளியானது என்பதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காஸ்ட்யூம் கூட அதேதான்
அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் கதாநாயகன் போட்டிருக்கும் அதே காஸ்டியூம்தான் இந்த சீரியலிலும் ஹீரோ சித்து சித் போட்டிருக்கிறார். அவர் கழுத்தில் போட்டிருக்கும் இந்த ஒரு குட்டி செயின் கூட அதே சீரியலின் காப்பி போல தான் இருக்கிறது என்றும் சிலர் கூறி வருகின்றனர் .ஆனால் உண்மையில் என்னவென்று சீரியல் ஒளிபரப்பான பிறகுதான் தெரியும் என்றும் பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சுட்டதா சுடாததா
ஏற்கனவே ஆலியா மானசா விற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அது போல திருமணம் சீரியல் கதாநாயகனான சித்து சித்க்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் போது அவர்களின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது இருந்தாலும் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்ட பிறகுதான் தெரியும் இது சுட்ட கதையா சுடாத கதையா என்று. என்னவோ போங்கப்பா.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications