ஆலியா, சஞ்சீவ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லையாம்
சென்னை: ஆல்யா மானசா தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கூறி இருக்கிறாராம்.
இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்றாலும் வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மீண்டும் சீரியலுக்கு திரும்பிய ஆலியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் மூலமாக காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடிதான். சீரியலின் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆலியா தற்போது திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்களின் கேள்விக்கு அசத்தலான பதிலை கூறி அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளாராம் .

அது எப்போது இருக்கும்
சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பிஸியாக இருக்கும் நட்சத்திர தம்பதிகளான இவர்கள் இருவரும் தங்களுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு அடிக்கடி பதில் கூறி திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து வந்த மாதிரி தான் தற்போது ஆலியா மானசாவிடம் ரசிகர்கள் பலர் தொடர்ந்து கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள். அதில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அந்த ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார். ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் பல ரசிகர்கள் தொடர்ந்து உங்களுக்கு எப்போது டியூ டேட் என்று கேட்டு வருகிறார்களாம். அதற்கு அவர் ஏப்ரல் மாதத்தில் கடைசி வாரத்தில் அல்லது மே மாதத்தின் முதலில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இப்போதே குழந்தைக்கு பெயரா
அடுத்தது ஒரு ரசிகர் இவரிடம் இவர் கர்ப்பமாக இருப்பதால் தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் நடிப்பாரா? ?அல்லது விலகி விடுவாரா என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு விலகுவதாக ஐடியா கிடையாது. ஒரே ஒரு சந்தியா தான்...அது இந்த ஆலியா மட்டும்தான் என்று கூறியிருக்கிறார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். தொடர்ந்து இவர்தான் என்ற சீரியலில் நடிக்க வேண்டும் என்றும் தங்களுடைய விருப்பங்களை கூறிவருகின்றனர். அடுத்ததாக ஒரு சிலர் உங்கள் இரண்டாவது பேபிக்கு நேம் என்ன வைக்கப் போறீங்க என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பெண் குழந்தை என்றால் லைலா, ஆண் குழந்தை என்றால் ஆர்ஸ் என்று கூறியிருக்கிறார்.

இது நல்ல பதில் தான்
அடுத்ததாக ஒரு ரசிகர் நீங்களும் சஞ்சீவ் இணைந்து நடிப்பீர்களா?? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தலையை மட்டும் ஆம் என்று சொல்கிற மாதிரி அசைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் இவர்கள் இருவரும் சேர்ந்து விரைவில் சீரியலில் நடிக்க இருக்கிறார்களா??அல்லது ராஜா ராணி மூன்றாவது பாகத்தில் நடிப்பார்களா?? என்று ரசிகர்களின் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. ஏதேனும் புது சீரியல்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களா?? என்றும் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இருவரும் ஒன்றாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் தங்களுடைய விருப்பங்களை கூறிவருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications