கொம்பன் ராஜ்கிரண்....கண்மணி சின்னவரு.... நல்லாத்தாய்யா சாமியாடறாங்க....!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கிராமமும் கிமிராமம் சார்ந்த வீடு மாதிரியும் மேட்ச் பண்ணி லொகேஷன்ஸ் சூட் பண்ணி இருக்காங்க.
மேட்ச் பண்ணுவது என்பதையே இப்போதெல்லாம் சீட் பண்றதுன்னுதான் சின்னத்திரை, பெரிய திரை இண்டஸ்ட்ரியில பேசிக்குவாங்களாம்.
அப்போ, ஒரு சீரியலையோ ஒரு படத்தையோ ஷூட் பண்ணும்போதே சீட் பண்றதுன்னுதான் உட்காருவாங்க போல...சரி நம்ம கண்மணி சீரியலுக்கு வருவோம்.

சின்னவரு ராஜ்கிரண்
கண்மணி சீரியலில் கண்ணன், சின்னவரா நடிக்கும் சஞ்ஜீவ்க்கு சாமியாடி கெட்டப் போட்டு இருக்காங்க. கொம்பன் படத்துல ராஜ்கிரணுக்கு போட்ட வேட்டைக்கு போற சாமியாடி கெட்டப் கண்மணி சீரியலில் சின்னவருக்கு போட்டு இருக்காங்க.

பொருத்தமான சாமியாடி வேடம்
சின்னவருக்கு இந்த வேஷம் பொருத்தமாத்தான் இருக்கு. கருப்பண்ண சாமி சின்னவரு கண்ணன் மேல ஏற ஒரு நாள்முழுக்க அவருக்கு உரு வேத்துவாங்களாம். ராத்திரி சாமிக்கு வேட்டைக்கு புறப்பட்டு போயி காடு மேடை சுத்திட்டு வந்த பிறகு குறி கேட்பாங்களாம்.

அப்படியே கொம்பன் படக்காட்சி
அப்படியே கொம்பன் படத்தின் காட்சியை பார்த்தது போல இருந்தாலும், அதில் குறி கேட்பதெல்லாம் ஒன்றுமில்லை. இதல் கண்ணன் சாமியாடிவிட்டு வந்த பிறகு கண்ணன் கட்டிக்கப் போறது சவுந்தர்யாவையா,இல்லை முத்து செல்வியையான்னு தெரிஞ்சுரும்.இதுக்காகத்தான் குடும்பமே காத்து இருக்கு.

நம்பிக்கையில் முத்து செல்வி
சின்னவரு சாமியாடி தன்னைத்தான் கல்யாணம் செய்துக்கறதா சொல்லுவாருன்னு சவுந்தர்யா அக்காக்களிடம் எதிர்த்து பேசறா முத்துச்செல்வி. ஆனால், கண்ணனின் அடி மனசில சவுந்தர்யாதான் இருக்கா...அவ பேரைத்தான் கண்ணன் சொல்லுவான்னு சவுந்தர்யாவின் அம்மா விஜயலட்சுமி அம்மா நினைக்கறாங்க.

தாய மாமனை விட்டு கொடுக்கலாமா?
தனக்கு பிடிச்ச தன் தாய் மாமா கண்ணன் தனக்குத்தான்னு ஒரு உரிமை எடுத்துக்க கூட தெரியாமலா சவுந்தர்யா இருப்பா... கிராமத்துலேர்ந்து வந்த முத்துச்செல்வி...சின்னவரு மனசுல நான்தான் இருக்கேன்...அவர் என் பேரைத்தான் சொல்லுவாருன்னு குடும்பத்தையே எதிர்த்து பேசறா...

எதிலும் 100 சதவிகிதம்
எந்த படத்தில், சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தன் பங்கான 100 சதவிகிதம் நடிப்பை கொடுப்பதில் சஞ்சீவ் வல்லவர். அவருக்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள்தான் அதிகம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications