Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்த விசிக MLA.. இவரு அசீம் மாமான்னு சொன்னாங்களே? இந்தப் பதில் குழப்பம் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு ஆதரவாக விசிக கட்சியின் எம்எல்ஏ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்து அசீம் தன்னுடைய உறவினர் விக்ரமனின் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் என்று கூறி வந்தார்.

அசீம் குறிப்பிட்ட அந்த நபர் ஆளூர் ஷானவாஸ் தான் என்று ரசிகர்கள் கூறி வந்தனர் காரணம் அசீம் எந்த இடத்திலும் அவருடைய உறவினரின் பெயரை கூறவில்லை.

ஆனால் தற்போது ஆளூர் ஷானவாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டிருக்கும் நிலையில் அப்போ இவர் அசீமின் உறவினர் இல்லையா? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

ஓட்டு சேகரிப்பு

ஓட்டு சேகரிப்பு

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையில், கடைசி வாரத்தில் இருக்கும் ஐந்து போட்டியாளர்களும் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த வகையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் உறவினர்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களுடைய பிடித்தமான போட்டியாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து ரசிகர்களிடம் ஓட்டு கேட்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் விக்ரமனுக்கு அவர் உறுப்பினராக இருக்கும் விசிக கட்சியின் தலைவர் ஓட்டு கேட்டு இருந்த நிலையில் தற்போது அந்த கட்சியின் எம்எல்ஏவும் ஓட்டு கேட்டு பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

இது முதல் முறை

இது முதல் முறை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு துறையில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வரிசையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக அரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்ட விக்ரமன் இந்த ஆறாவது சீசனில் அறிமுகமானார். இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர் .அதில் பலர் புது முகங்களாக இருந்தாலும் ஒரு கட்சியின் உறுப்பினராகவும் ஜெர்னலிஸ்ட் ஆகவும் நடிகராகவும் இருந்த விக்ரமன் தொடக்கத்தில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் ஒரு சில நாட்களிலே இவருடைய கேரக்டர் வெளியே தெரிய தொடங்கி விட்டது.

அதிகரிக்கும் ரசிகர்கள்

அதிகரிக்கும் ரசிகர்கள்

நாட்கள் செல்ல செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் விக்ரமன் எதற்கு வந்தாரோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்களைப் போல இவர் செய்யாமல் நியாயத்திற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறேன் என இவர் பேசுவது பெண்கள், திருநங்கைகள், சாதி வெறியர்களுக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் அதையே செய்து வருகிறார் என்று இவருக்கு ரசிகர்கள் உருவாக தொடங்கினார். அதிலும் ஆரம்பத்தில் இருந்து விக்ரமன் மற்றும் அசீம் இடையே பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. வெளியே ரஜினி -கமல் விஜய் -அஜித் ரசிகர்களுக்கு இருக்கும் போட்டிகளும் பிரச்சனைகளும் போல தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் விக்ரமன் மற்றும் அசீம் ரசிகர்களுக்குள் இடையேயும் நடந்து வருகிறது.

ஆளூர் ஷானவாஸ் பதிவு

ஆளூர் ஷானவாஸ் பதிவு

இந்த நிலையில் இறுதி வாரத்தில் இருக்கும் விக்கிரமனுக்கு முதல் முறையாக நேரடியாக தனது ஆதரவை திருமாவளவன் பிக் பாஸில் நடைபெறும் தேர்வில் போட்டியில் இருக்கும் தம்பி விக்ரமன் அவர்களுக்கு வாக்களிப்போம். ஹாட்ஸ்டார் வழி வாக்களித்து அவரை தேர்வு செய்வோம், என்று பதிவு வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியி அரசியல் தளமாக மாறிவிட்டது என்று பலரும் குற்றசாட்டை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது திருமாவளவனை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் எம்எல்ஏவாக ஆளூர் ஷானவாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம்; கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம்! "என்ற தலைவர் திருமாவளவன் வரிகளுக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அப்போ இவர் உறவினர் இல்லையா

அப்போ இவர் உறவினர் இல்லையா

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். காரணம் அசீம், என்னுடைய அப்பாவுடன் பிறந்த தம்பி அதாவது என் சித்தப்பா உடைய கட்சியில் விக்ரமன் உறுப்பினராக இருக்கிறார் அதனால் தான் அவர் என்னிடம் சரியாக பேசவில்லை என்று கூறி இருந்தாராம். அப்போது நெட்டிசன்கள் பலரும் அசீம் மாமா ஆளூர் ஷானவாஸ் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் ஆளுநர் ஷானவாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கும் விஷயம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+